'புதிய யாப்பு தேவையில்லை என்பது, பிக்குகளின் கருத்தேயன்றி மக்களின் கருத்தல்ல'
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு 6.2 மில்லியன் மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மாற்றம் தேவையற்றது என்று பௌத்த பீடாதிபதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“பௌத்த பீடாதிபதிகள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்து, பௌத்த பிக்குகளின் கருத்தேயாகும்.
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு 2015ஆம் ஆண்டு தேர்தலில், 6.2 மில்லியன் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
முன்னைய அரசாங்கங்களும் பதவிக்கு வர முன்னர், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. ஆனால் அதனை நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில் பௌத்த பீடாதிபதிகளுக்கு நிலைமையை விளங்கப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அடிப்படைவாதிகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தாமல் தடுப்பதற்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அரசின் கடப்பாடு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment