அவுட்டாகி வெளியேறிய வீராங்கனை, வித்தியாசமாக வழியனுப்பிவைப்பு (வீடியோ)
www.gifs.com/gif/qjy1My
அவுட் ஆகி வெளியேறிய இங்கிலாந்து வீராங்கனையைத் தென்னாப்பிரிக்க பெண் வீரர்கள் கவுண்டமணி ஸ்டைலில் வழியனுப்பியது வைரலாகியுள்ளது. ஆங்கிலத்தில் "Kick in the Shins" என்கிற ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது, ஒரு செயலில் ஈடுபட்டு அது மோசமான பின்விளைவுகளைக் கொடுத்தால் அதற்கு உவமானமாக இந்தச் சொற்றொடரைச் சொல்வார்கள். ஷின் என்றால் முழங்கால்களுக்கு கீழ் இருக்கும் பகுதியைக் குறிக்கும். இந்த இடத்தில் அடிபட்டால் கடுமையான வலிகொடுக்கும். எனவே, எதிர்பாராதத் தோல்வியையும் மோசமான பின்விளைகள் கொண்ட நிகழ்ச்சிகளை இதைக் கொண்டு குறிப்பிடுவார்கள். ஆனால், நடந்துவரும் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதே 'கிக் இன் தி ஷின்'ஷை நிஜமாகச் செய்கிறார்கள். ஆனால், வலி கொடுக்கும் வகையில் இல்லாமல் அனைவரும் பாராட்டும் வகையில் இதை நடைமுறை படுத்தியுள்ளார்கள். நேற்று தென்னாப்பிரிக்காவின் பிரிஸ்டலில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க பெண்கள் அணியும் இங்கிலாந்தும் மோதின. முதல் பேட் செய்த இங்கிலாந்து அணி அடி நொறுக்கி 50 ஓவர்களில்
373 என்கிற மிகப்பெரிய இலக்கை எட்டியது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 68 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து வென்றது.
இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது அந்த அணியின் ப்யோமோன்டும் சாரா டெய்லரும் அடி வெளுத்தனர். இதில் சாரா டெய்லர் 135 பந்துகளில் 145 ரன்களை எடுத்தார். கடுமையான போராட்டத்தின் பின்னரே இவரை அவுட் செய்ய முடிந்தது. இவர் அவுட் ஆகி வெளியேறிக்கொண்டிருந்தபோது தென்னாப்பிரிக்க அணியின் வீராங்கனைகள் ஓடி வந்து அவரின் பேடில் கால்களால் கிக் செய்தனர். தங்களுக்கு 'கிக் இன் தி ஷின்' என்பதை போன்ற வலியை ஏற்படுத்திய வீரரை அப்படி ஒரு செய்கை மூலம் வாழ்த்தி வழியனுப்பினர். இதை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர். இப்படி ஒரு நட்புரீதியிலான வழியனுப்புதலை வரவேற்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள். www.gifs.com/gif/qjy1My
Post a Comment