இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள், அமெரிக்காவுக்கு கண்டனம்
கொழும்பில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் சம்பந்தமாக அமெரிக்க தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைதொழிலாளர்களின் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
கொழும்பில் உள்ள முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தமது வண்டிகளில் பயணிக்கும் வெளிநாட்டு பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருந்தது.
கொழும்பு நகரில் முச்சக்கர வண்டிகளில் தனியாக பயணிக்க வேண்டாம் என இலங்கைக்கு வரும் அமெரிக்க பெண்களுக்கு அமெரிக்க தூதரகம் ஆலோசனை வழங்கியிருந்தது.
அமெரிக்காவின் இந்த அறிக்கையானது முச்சக்கர வண்டி தொழிலை முடக்குவதற்கான அறிக்கை என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையில் முச்சக்கர வண்டி தொழிலை கட்டுப்படுத்த வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் இதன் காரணமாக சில சம்பவங்கள் நடக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment