ரங்கிரி தம்புள்ளை விஹாரை, காலவரையறையின்றி மூடப்பட்டது
ரங்கிரி தம்புள்ளை விஹாரை நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வரலாற்று முக்கியத்துவமிக்க ரங்கிரி தம்புள்ளை விஹாரையை நேற்று முதல் மூடி வைப்பதற்கு கல்வி அமைச்சுக்கும் புராதன சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பிலான குழுவிற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் நேற்று முதல் மீளறிவிப்பு செய்யப்படுகின்ற வகையில் இந்த புராதன விஹாரையானது வெளிநாட்டிலிருந்து வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கும் கூட திறக்கப்படாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சர் கல்வி அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற புராதன சொத்துக்களை பாதுகாப்பதற்கான குழுவினருடனான சந்திப்பின் போதே இந்த விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூட்டப்பட்டிருக்கும் காலப்பகுதியில் இந்த விஹாரையினும் காணப்படுகின்ற சிதைவுக்குள்ளாகும் ஓவியங்கள் குறித்தும் விஹாரையினை மீளவும் சீர்திருத்தும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விகாரையில் பல ஊழல் பணமோசடி நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விகாரையில் பல ஊழல் பணமோசடி நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment