இஸ்லாத்தையும், நபிகளாரையும் இழிவுபடுத்தியவனுக்கு முதலமைச்சரின் துணிகர நடவடிக்கை
மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் சௌவிக் சர்க்கார் எனும் RSS வெறியன் சமூக வளைதலத்தில் இஸ்லாத்தை பற்றியும்,நபிகள் நாயகத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் பதிவிட்டுள்ளான்.
இதனால் அப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் ஏற்பட்டது.இந்தியாவை போல மேற்கு வங்காளத்தில் மதவாதம் தலைதூக்க கூடாது என்ற அக்கறை கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி முதற்கட்டமாக RSS வெறியன் சவுக்காரை கைது செய்து கடுங்காவல் தண்டனைக்கு உத்தரவிட்டார்.
பதற்றம் நீடிக்கும் பரகானாஸ் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக சுமார் 400 எல்லை படை பாதுகாப்பு வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளார்.ஆங்காங்கே சில பூசல்கள் நடந்தாலும் யாரும் கொல்லப்படவில்லை,காயப்படவில்லை என பாதுகாப்பு படை அதிகாரி உறுதிபட கூறியுள்ளார்.
இதுதான் தனக்கான சரியான சந்தர்ப்பம் என மம்தாவின் ஆட்சியை கவிழ்க்கவும்,மதவாத்தை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளவும் பாஜக MP மீனாட்சி லேகி,ஓம் மாத்தூர்,சத்யபால் சிங் ஆகியோரை அதிரடியாக கைது செய்ய உத்தரவிட்டார் மம்தா பானர்ஜி.மேலும் பாஜகவின் குள்ளநரி ரூபா கங்குலி விமான நிலையம் வந்த சில மணித்துளியிலேயே கைது செய்து மேற்கு வங்கத்தில் அமைதியை நிலை நாட்டினார் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்.
மேலும்,மேற்கு வங்க ஜமாஅத் இ இஸ்லாம் இயக்கத்தின் தலைவர் முஹம்மது நூருதீன் அவர்கள் "சமூக வளைதலங்களை மாநில அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும்,மதவாதத்தை தூண்டுபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கைது செய்து வங்காளத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வழிவகை செய்யவேண்டும்"எனவும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் குஜராத்,அயோத்தி,மும்பை,கோயம்புத்தூர் என பல பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.மம்தா அவர்கள் இந்த விசயத்தில் மேற்கொண்ட ஏதாவது ஒரு நடவடிக்கையை அப்போதைய முதல்வர்கள் செய்திருந்தால் பல உயிர் சேதங்களும்,பொருட் சேதங்களும் ஏற்பட்டிருக்காது.அந்த வகையில் ஒரு மாநில முதல்வர் இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு திறமையாக செயல்பட வேண்டும் என்பதற்கு மம்தா பானர்ஜி அவர்கள் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.
Post a Comment