தனது மாப்பிள்ளை தோழனை, சந்தித்த மைத்திரி
பாணந்துறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று “மதுவில் இருந்து விடுதலையான நாடு” தேசிய வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட மாநாடு முடிவடைந்ததும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு மத்தியில் நடந்து சென்றார்.
அப்போது ஜனாதிபதியை சந்திக்க தலைமுடி நரைத்து போன ஒருவர் வந்துள்ளார்.
கடந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் ஆழமான நட்பை நினைவூட்டும் கோப்புடன் வந்த அந்த நபர், ஓய்வுபெற்ற ஆசிரியரும் சமூக சேவையாளருமான பாணந்துறை மாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஜீ.ஜயசேன பீரிஸ் என்ற நபராவார்.
60ம் ஆண்டுகளில் ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் பொலனறுவை அத்துமல்பிட்டிய பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
அந்தக் காலத்தில் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த தற்போதைய ஜனாதிபதியே ஜயசேன பீரிஸின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார்.
ஜயசேன பீரிஸின் திருமணத்தின் போது அவரது மாப்பிள்ளை தோழனாகவும் ஜனாதிபதி இருக்கும் அளவுக்கு அவர்களிடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது.
கஷ்டமான பிரதேசத்தில் ஆசிரியர் சேவையின் கஷ்டத்தை போக்கிக்கொள்ள துணையாக இருந்த தனது கிராமத்து நண்பன் தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் ஜயசேன பீரிஸ், இன்றும் தனது நண்பனிடம் அதே நெருக்கத்தையே உணர்ந்தார்.
Post a Comment