Header Ads



ஜெய்லானியில் பௌத்த பிரதேசங்களை பாதுகாப்பேன் - ரணில் முன் அகிலவிராஜ் சபதம்

-Dc-

தான் இன்னும் ஓரிரு தினங்களில் ஜெய்லானிக்குச் சென்று அங்குள்ள பௌத்தர்களின் புனிதப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், அங்குள்ள பௌத்தர்களின் காணிகளுக்கு அடையாளமிடப் போவதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தம்புளை விகாரை சர்ச்சை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பௌத்தர்களின் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. அப்போதைய வனப்பாதுகாப்புத் திணைக்களம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் புனிதப் பிரதேசங்கள்  உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.