Header Ads



அரசியல் அமைப்பை உருவாக்கும், பணிகளை நிறுத்த முடியாது - ரணில் திட்டவட்டம்

அரசியல் அமைப்பை உருவாக்கும் பணிகளை நிறுத்திக் கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து செயற்படுத்தும் உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தீன் கீழ் அமைக்கப்பட்ட மன்னார் எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் பின்னர் உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குமாறு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணையளித்துள்ளனர். அந்த மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டிய அத்தியாவசியமானது. புதிய அரசியல் அமைப்பு குறித்து மாநாயக்க தேரர்கள் ஏனைய மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு உரிய அந்தஸ்து வழங்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் மரியாதை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை என மூன்று பீடங்களினதும் மாநாயக்கத் தேரர்கள் அண்மையில் தீர்மானித்திருந்தனர்.

No comments

Powered by Blogger.