ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லையென்றால், ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது
ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லையென்றால், இஸ்லாமியர்களை ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பா.ஜ.க எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த எம்எல்ஏ மற்றும் எம்பி-க்கள் அவ்வப்போது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகின்றனர். அதனால், தேவையில்லாத சர்ச்சைக் கருத்துகளைப் பேசக் கூடாது என்று உத்தரப் பிரதேச பா.ஜ.க எம்எல்ஏ-க்களுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் உத்தரப்பிரப் தேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ பிரிட்ஜ்புஷான் ராஜ்புட் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவில் பேசினார்.
அந்த வீடியோவில் அவர், 'அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லையென்றால், உத்தரப்பிரப் தேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும், அமர்நாத்தில் யாத்ரிகர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நம்முடைய மதத்தை வன்முறைக்குத் தூண்டும் செயலாகும். நம்முடைய அரசு, அந்தக் குறிப்பிட்ட மக்களுக்கும் அந்த நாட்டுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், நம்முடையை மதத்துக்கு எதிராக செயல்பட யாருக்கும் தைரியம் வராது' என்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment