'ராஜித்தவை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சர்வதேசத்தில் உதவி நாடப்படும்'
டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நோய் பரவல் தொடர்பில் தூதரங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதார அமைச்சரின் இயலாமை குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சரை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் நடவடிக்கைகள் மருத்துவ கல்விக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதாகவும் அவரது செயற்பாடுகளே நாட்டில் டெங்கு தீவிரமடையக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளே டெங்கு நோய் அதிகரிக்கக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment