மஹிந்த காலத்தில் விமர்சனம் செய்திருந்தால், டிலானுக்கு என்ன நடந்திருக்கும்..?
ராஜாங்க அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க பதிலளித்துள்ளார்.
அமைச்சர் டிலான் பெரேரா அண்மையில் துமிந்த திஸாநாயக்கவின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என கூறியிருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் ஒருவரை பகிரங்கமாக இவ்வாறு விமர்சனம் செய்வதன் மூலம் டிலான் பெரேரா தனது அரசியல் அனுபவ முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளார் எனவும் இதனால் எவருக்கும் எந்தவொரு கருத்தையும் வெளியிட அனுமதியுண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமர்சனங்கள் இழிவுபடுத்தல்களின் மூலம் தமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியின் தலைமையை வகித்த காலத்தில் தேசிய அமைப்பாளரை விமர்சனம் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டும் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment