Header Ads



கிழக்கு மாகாணம் முஸ்லிம் மயமாகிறது - தமிழ், சிங்கள மக்களுக்கு பாதிப்பு - சுமனரத்ன தேரர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச அலுவலகங்களிலும் மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பொலிஸிலும் பெரும்பான்மையோர் முஸ்லிம் அலுவலர்களாகவே இருக்கின்றனர். இதனால் தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீராவோடை சக்தி வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் காணி அத்துமீறி அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச அலுவலகங்களிலும் மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பொலிஸிலும் பெரும்பான்மையோர் முஸ்லிம் அலுவலர்களாகவே இருக்கின்றனர். இதனால் தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளது. இதனால் நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றோம். 

அரச அலுவலகங்களிலும் மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பொலிஸிலும் தேவையான தகுதியான அலுவலர்களை சரியாக பிரித்து பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவருக்கு வேண்டிய விதத்தில் செயற்பட்டு வருகின்றார். அவர்தான் இந்த விளையாட்டை விளையாடுகின்றார்.

ஒவ்வொரு நாளும் பாடசாலை மாணவர்களை வீதிகளில் கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்வது தவறு. மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடங்கொடுக்க வேண்டும்.  நான் ஒரு மதகுரு என்ற அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மக்களுடன் அன்னியோன்யமாக பழகும் ஒருவனாக இருக்கின்றேன். அது எல்லோருக்கும் தெரியும். 

தமிழ் மக்களோடு எமக்கு இருக்கும் அன்னியோன்யம் சமய சூழலோடு சேர்த்து இதிகாசத்திலும் வேண்டுமான அளவு சம்பந்தம் இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதை உபயோகித்து நான் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் அனைத்தையும் மதகுரு என்ற அடிப்படையில் செய்திருக்கின்றேன். சமூகத்திற்கு அந்த விடயங்கள் சென்றடையவில்லை. இன்றைய தினமும் நான் இங்கு வந்திருப்பது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமலே.

இவ்வாறான பிரச்சினை சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது. 30வருட காலம் யுத்தம் செய்த போது புலி புலி என்று கூறி தமிழ் மக்களுக்கு தண்டனை வழங்கினார்கள். இன்று யுத்தம் முடிவடைந்த பின்னராவது அந்த மக்களுக்கு சகல வழிகளிலும் நன்மைகள் கிடைக்கின்றதா என்று பார்த்தால் இந்த கிராமத்திலுள்ள மக்கள் யுத்த காலத்தைக் காட்டிலும் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். 

இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலையிட்டு இந்த மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஒரு மதகுரு என்ற அடிப்படையில் வேண்டுகோளை விடுக்கின்றேன். 

அதேபோல் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களால் இந்த மக்களுக்காக அவர்களின் பிரச்சினைக்காக பாராளுமன்றத்தில் போராடுவதற்கு ஏன் முடியாது. இந்த அப்பாவி மக்கள் யாரும் 19வது சீர்திருத்தம் பற்றியோ 13வது சீர்திருத்தம் பற்றியோ அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் சம்பந்தன் போன்றோர் இந்த மக்களுக்காக இன்று வரை எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. 

அதனால் நாங்கள் கவலையடைகின்றோம்.இதுதொடர்பாக அரசாங்கத்திற்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்குத் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்.  இந்த மக்களை இந்த நிலையிலேயே வைத்திருக்காமல் அவர்களுக்கு உரிய தீர்வினை வழங்குங்கள். மீராவோடை மட்டுமல்ல புன்னக்குடா, புனானை போன்ற பகுதிகளிலும் காணிகள் அபகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

புனானையில்; ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகின்றது. பெரிய பள்ளிவாசல் அமைப்பதில் தவறில்லை.ஆனால் பிற்காலத்தில் தமிழ் மக்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவர்கள் ஆசியாவிலே மிகப் பெரிய பள்ளிவாசல் அமைக்கும்போது இந்து, பௌத்த, கத்தோலிக்க மதத்தை சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதை இந்த நாட்டிலுள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் மெதுவாக அதிகாரத்தை பயன்படுத்தி இதனை செய்து வருகின்றனர். முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளை முன்னிறுத்தி அவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த 74 உறுப்பினர்கள் இலங்கையில் இருப்பதாக இன்று -18- காலை சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அந்த 74பேரில் ஒருவர் இவ்விடத்தில் இருக்கலாம். இருந்து எல்லாவற்றையும் குழப்பி விட்டு நாட்டில் இனவாதமும் மதவாதமும் இருப்பதாக சமூகத்திற்கு காட்டப்போகின்றார்கள். அவர்கள் யாரும் எங்கள் மீது கை வைக்க வேண்டாம்.

நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் இருப்போம்.தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம். அவர்கள் யார் மீதும் கைவைக்க முற்பட்டால் அந்த ஒவ்வொரு நிலைமையிலும் அதனை எதிர்கொள்வோம். அதேபோல் சொத்துகளை அபகரித்தால் அந்த மக்களுக்காக அதனை பெற்றுக்கொடுப்பதற்கு உயிர்த் தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன். 

இங்கிருக்கின்ற மாணவர்களாகிய நீங்கள் கவலைப்படவேண்டாம், துன்பப்பட வேண்டாம். உங்களுக்கு இல்லாமல் போனது மீண்டும் கிடைக்கும்.உங்களுடன் நாம் இணைந்திருப்போம்.

நாளை நாங்கள் மாவட்ட அரசாங்க அதிபரையும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரையும் சந்திப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.  நாளை அவர்கள் காரியாலயத்தை மூடிவிட்டுச் சென்றால் அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை பிறகு தீர்மானிப்போம்.  இதில் நாங்கள் வெற்றியை பெற்றுத் தருவோம். இதற்காக பத்து நாட்கள் அவகாசம் கேட்டுக்கொள்கின்றேன். 

உரிய அதிகாரிகள் இதற்கான தீர்வை பெற்றுத் தராத பட்சத்தில் மக்களுடன் இணைந்து பாடசாலையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கின்ற வேலியை உடைத்தெறிவோம் என்றார்.

3 comments:

  1. Best candidate for next cm you have good treatments for racists

    ReplyDelete
  2. முட்டாள் தனமான பேச்சு

    ReplyDelete
  3. Sitan is calling for unity

    ReplyDelete

Powered by Blogger.