மகிந்தவைச் சந்திக்கவுள்ள 8 பிரதியமைச்சர்கள்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எட்டு பிரதி அமைச்சர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று கொழும்பு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீரவை, எட்டு பிரதி அமைச்சர்களும் சந்தித்திருந்தனர்.
தமது அதிருப்திகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துக் கூறுமாறு அவரிடம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இன்று மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் எட்டு பிரதி அமைச்சர்களும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அருந்திக பெர்னான்டோ, லக்ஸ்மன் வசந்த பெரேரா, இந்திய பண்டாரநாயக்க, நிமல் லான்சா, துலிப் விஜேசேகர, சுசந்த புஞ்சிநிலமே, சாரதி துஸ்மந்த ஆகியோரே இன்று மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் தனியான குழுவாக அமரவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
Post a Comment