Header Ads



ஒரே கடையில் 6 தட­வை­ திரு­டிய மாணவன், மின்­கம்­பத்தில் கட்டிவைப்பு


திருட்டுச்  சம்­ப­வங்கள் தொடர்பில்  கண்­கா­ணிப்பு கெம­ரா மூலம் இனம் கண்ட மாணவன் ஒரு­வனைப் பிடித்து மின் கம்­பத்தில்  கட்டி வைத்த பின்னர், மொன­ரா­கலைப் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்த சம்­பவம் நக்­கல என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

நக்­கல என்ற இடத்தில் உள்ள  ஒரே கடை  ஐந்து தட­வைகள்  உடைக்­கப்­பட்டு திரு­டப்­பட்­டி­ருந்­தது.  இத்­தி­ருட்டு குறித்து முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்ட போதிலும், திருட்டு குறித்து கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. இதனால் கடை உரி­மை­யாளர் எவ­ருக்கும் தெரி­யாமல் கடைக்கு சி.சி ரீ வி. கெம­ராவைப் பொருத்­தி­யுள்ளார்.  இதன் பின்னர்  ஆறா­வது முறை­யாக, குறிப்­பிட்ட கடை உடைக்­கப்­பட்டு திரு­டப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து, கடை உரி­மை­யா­ளர்சி.சி ரீ வி. கெம­ராவில் பார்த்த போது தனது கடையை உடைத்து திரு­டி­யது மாணவர் ஒருவர் என்­பது  தெரி­ய­வந்­தது. கடை உரி­மை­யா­ளரின் சகாக்­களும் இக் கெம­ராவை பார்­வை­யிட்­டனர்.

இதனை அறி­யாத திருட்டில் ஈடு­பட்ட மாணவன் அவ்­வ­ழி­யாக சென்ற போது கடை உரி­மை­யா­ளரின் சகாக்கள், அம்­மா­ண­வனைப் பிடித்து, மின்­கம்­பத்தில் கட்டி வைத்து பின்னர் மொன­ரா­க­லை­பொ­லி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர்.

அப்­ப­குதி பாட­சாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 15 வயது நிரம்­பிய மாண­வரே, பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வ­ராவார். குறித்த மாணவன் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் மொனராகலை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments

Powered by Blogger.