இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு, ஆகஸ்ட் 6 இல் புறப்படுகிறது - சுகாதார நலன்களுக்காக 4 டாக்டர்கள்
-ARA.Fareel-
இவ்வருடத்திற்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து முதலாவது தொகுதி ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதியும் இறுதித் தொகுதியினர் ஆகஸ்ட் 26 ஆம் திகதியும் பயணிக்கவுள்ளனர் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலீக் தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
ஹஜ் கடமையைப் பூர்த்தி செய்துவிட்டு முதலாவது தொகுதி ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதியும் இறுதித் தொகுதியினர் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதியும் நாடு திரும்புவார்கள்.
சவூதி அரேபியாவில் இலங்கை ஹஜ்யாத்திரிகர்களின் சுகாதார நலன்களைக் கவனிப்பதற்காகவும், நோய்கள் ஏற்படின் சிகிச்சையளிப்பதற்காகவும் 4 டாக்டர்கள் அடங்கிய வைத்திய குழுவொன்றும் சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கவுள்ளது.
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் யாத்திரிகர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பு ஊசி ஏற்றிக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சகல பிரதேச சுகாதார அலுவலகங்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தடுப்பு ஊசி பணம் கொடுத்தே ஏற்றிக் கொள்ளப்பட வேண்டும்.
ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கள் தொடர்பில் திணைக்களம் அதிக கவனம் செலுத்தும் என்றார்.
Post a Comment