பயன்படுத்தாத கட்டடத்துக்கு 500 மில்லியன் கொடுத்த நல்லாட்சி அரசாங்கம்
விவசாய அமைச்சின் பயன்பாட்டுக்கென, 2016ஆம் ஆண்டில் கட்டடமொன்றைக் குத்தகைக்கு எடுத்த அரசாங்கம், அதற்காக 500 மில்லியன் ரூபாய் முன்பணத்தைச் செலுத்தியுள்ள போதிலும், இதுவரை அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தவில்லையென, அரசாங்கம் நேற்று ஒப்புக் கொண்டது.
நாடாளுமன்றத்தில் வைத்து, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவால் எழுப்பப்பட்ட வாய்மூலக் கேள்விக்கு, விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹாரையால் சமர்ப்பிக்கப்பட்ட பதிலேயே, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
குறித்த அலுவலகம், பொருத்தமான முறையில் இன்னமும் வடிவமைக்கப்படாத நிலையில், அமைச்சு, அக்கட்டத்துக்கு இன்னமும் செய்யவில்லை என்று, அதனபோது கூறப்பட்டது.
மாதாந்த வாடகையாக 15.07 மில்லியன் ரூபாயும் சேவைக் கட்டணமாக 6.1 மில்லியன் ரூபாயும் செலுத்தப்படுவதற்கு, அரசாங்கம் சம்மதித்துள்ளது என்று, இங்கு மேலும் வெளிப்படுத்தப்பட்டது.
இதன்போது, அமைச்சுப் பொறுப்பான அமைச்சர் (துமிந்த திஸாநாயக்க), வாய்மூலக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு வாய்ப்பாக, நாடாளுமன்றத்துக்குச் சமுகமளிப்பதில்லை என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
Post a Comment