இலங்கை வரும் 3 ஐ.நா. நிபுணர்கள் - முஸ்லிம்களும் பயன்படுத்த வேண்டும்
இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் என்பன தொடர்பில் மதிப்பீடு செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மூன்று விசேட நிபுணர்கள் இவ்வருடம் இலங்கை வரவுள்ளனர். அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயற்குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது.
அந்தவகையில் மனித உரிமையை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான விசேட நிபுணர் ஒருவர் இம்மாதம் இலங்கை வரவிருக்கிறார்.
அத்துடன் சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான விசேட அறிக்கையாளர்
மற்றும் உண்மை, நீதி நட்டஈடு, மீள்நிகழாமை தொடர்பான விசேட நிபுணர் ஒருவரும் இவ்வருடத்தில் .இலங்கைக்கு வரவுள்ளனர்.
மேலும் பலவந்தமாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவும் இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
பிற்குறிப்பு
மேற்சொன்ன 3 ஐ.நா. அதிகாரிகளும் முக்கியமானவர்கள். பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அவைசாந்த முஸ்லிம் அமைப்புக்கள் இந்த ஐ.நா. அதிகாரிகளை சந்திப்பதற்கான ஆக்கபூர்வ முயற்சிகளில் இறங்கலாம் அல்லவா..?
Post a Comment