300. 000 மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி தொடர்பில் பாகிஸ்தானுடன் பேச்சு
300, 000 மெற்றிக் தொன் அரிசியை பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்றுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள வர்த்தக அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர், அந்நாட்டுடன், இது குறித்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வருடாந்தம் 700, 000 தொன் அரிசியை உற்பத்தி செய்கிறது.
பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி உற்பத்தியில் பிராந்தியத்தில் பாகிஸ்தான் முன்னிலை வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment