Header Ads



3 மாதங்களை கேட்கும் ஜனாதிபதி, JVP யும் ஆதரவு

 திருடர்களை அரசு பாதுகாத்து வருகின்றதுடன், இதேவேளை அமைச்சர்கள் மீது ஜனாதிபதியும் அதிருப்தியில் இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சரவை கூட்டத்தின்போது, திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் தனக்கு 3 மாதங்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விரு திணைக்களங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களின் செயற்பாடுகள் மீது திருப்தி இல்லை என்பதையும், அவர்கள் திருடர்களைப் பாதுகாக்கின்றனர் என்பதையுமே ஜனாதிபதியின் கருத்து வெளிப்படுத்துகின்றது.

எனவே, இவ்விரு அமைச்சுகளையும் (நீதி, சட்டம் ஒழுங்கு) ஜனாதிபதி தனக்குக் கீழ் கொண்டுவர வேண்டும். அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இதற்கு இடமிருக்குமோ தெரியவில்லை என தெரிவித்தார்.

மேலும், எது எப்படியோ திருடர்களை இந்த அரசு பாதுகாத்து வருகின்றது. ஊழல்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை எதுவும் இல்லை.

திருடர்களுடன் அமர்ந்திருப்பது திருடர்களைப் பாதுகாப்பதற்கு ஒப்பான செயலாகும் என அநுரகுமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.