Header Ads



பேஸ்புக் மூலம், தவறான களியாட்டம் - 29 பேர் கைது

முகப்­புத்­தகம் மூலம் இணைந்தி­ருந்த 18 – 20 வய­துக்­கி­டை­யி­லான இளை­ஞர்கள் இரு­பத்­தொன்­ப­துபேர் கொண்ட நண்­பர்கள் குழா­மொன்று போதைப்­பொருள் களி­யாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த வேளை விசேட பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்யப்­பட்­டுள்­ள­தாக பதுளை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த சம்­பவம் நேற்று முன்தினம் பதுளை போகா­ம­டித்த பகு­தி விடு­தி­யொன்றில் இடம்­பெற்­றுள்­ளது.

முகப்­புத்­தகம் மூலம் இணைத்துக் கொண்ட 18 – -20 வய­துக்­கி­டை­யி­லான இளை­ஞர்கள் கொண்ட குழு­வொன்று கேரளா கஞ்சா, ஹெரோயின் மாத்­தி­ரை­கள் உட்­கொண்டு களி­யாட்­டத்தில் ஈடுபட்டிருந்த வேளை 119 பொலிஸ் விசேட பிரி­வுக்கு கிடைத்த தக­வ­லொன்­றை­ய­டுத்து விரைந்த சுமார் 200 பேர் கொண்ட ஐந்து பொலிஸ் குழுக்கள் மேற்­படி இளை­ஞர்­களை கைது செய்­தி­ருந்­தனர். 

மேற்­படி கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்கள் பதுளை பொலிஸார் மூலம் பதுளை மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் நேற்று முன்­தினம் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது கேரளா கஞ்சா வைத்­தி­ருந்த 7 பேருக்கு 3000 ரூபா அப­ரா­தமும் ஹெரோயின் மாத்­தி­ரை­கள் வைத்­தி­ருந்த 16 பேருக்கு தலா 7000 ரூபா அப­ரா­தமும் ஹெரோயின் ஒட்­டப்­பட்ட முத்­தி­ரைகள் வைத்­தி­ருந்த 6 பேருக்கு தலா 7500 ரூபா வீதமும் அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. 

இது தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ரொ­ருவரை எதிர்­வரும் 18ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­ப­டியும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.மேற்­படி நபர்கள் பதுளை,மொன­ரா­கலை,பலாங்­கொடை,இரத்­தி­ன­புரி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.