11 பிடிவிறாந்துள்ள மதப்போதகர், மனைவியுடன் கைது
மிகவும் சூட்சுமமான முறையில் பணமோசடியில் ஈடுபட்டுவந்த மதபோதகரும் அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை . கல்முனை .நீர்கொழும்பு, காலி பிரதேசங்களில் பொதுமக்களிடம் இருந்து 35 இலட்சம் ரூபாக்களை மிகவும் சூட்சுமமான முறையில் மோசடி செய்து கடந்த 3 வருடங்களாக தலைமறைவாகி 11 நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த மதபோதகர் அவரது மனைவி ஆகிய இருவரையும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி பாணந்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு அம்பாறை நகவம்புற பிரதேசத்தில் குறித்த மதபோதகர் தங்கியிருந்து மத போதனையில் ஈடுபட்டுவந்த நிலையில் வியாபாரம் செய்வதாக பலரிடம் பல இலட்சம் ரூபா பணத்தை வாங்கிய பின் அதனை திருப்பிக் கொடுக்காமல் அங்கிருந்து வெளியேறி தலைமறைவாகி வேறு பிரதேசத்திற்கு சென்று இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளர்.
இவர்களிடம் பணத்தை கொடுத்து இழந்தவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்து நீதிமன்றங்களிலும் வழக்கதாக்கல் செய்துள்ளனர.; இவர்களுக்கு கல்முனை, அம்பாறை, நீர்கொழும்பு, காலி போன்ற நீதிமன்றங்களில் 11 நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் மதபோதகர் சரியான முகவரியை எவரிடம் வழங்காமலும் சொந்த முகவரியில் தமது கையடக்க தொலைபேசி எண்களை பதிவு செய்யாமலுல் மிகவும் நுட்பமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள இவர்கள் தொடர்பாக அம்பாறை தலைமையக பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இவர்களின் பெயரில் வங்கி ஒன்றில் கணக்கு இருப்பதை கண்டுபிடித்து அதில் உள்ள சரியான முகவரியை தேடி அம்பாறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகரும் வழக்கு தொடுநர் பிரிவு பொறுப்பதிகாரியுமான வி. பிரகலாதவன் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் ரம்மியலால், கான்டபிள் சுதர் ஆகிய குழுவினர் பாணந்துறை வாதுவ பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து மத போதகர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை சேற்று சனிக்கிழமை கைது செய்து பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் கல்முனை நிதிமன்றத்தில் 27 ஆம் திகதியும் காலி நீதிமன்றத்தில் 5 ஆம் திகதியும் வழக்கு உள்ள ஏனைய நீதிமன்றங்களில் அன்றைய தினங்களில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டதாக அம்பாறை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
matha pothahar???? enne matham
ReplyDeleteMuslima iruntha mattumthan Madam poduvaangapola
ReplyDelete