தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளராக SRM ஆஷாத்
-இர்த்சாத் றஹ்மத்துல்லா-
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஈரானில் நடைபெறவுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சுற்றுலா கால்பந்தாட்ட போட்டி தொடரில் பங்கேற்கும் இலங்கையின் தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளராக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி உடற்கல்வி போதனாசிரியரும், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளன பொருளாளருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் தெரிவாகியுள்ளார்.
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சபை அமர்வுகள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஹேமானந்த, செயலாளர் என்.எஸ்.பீ.திஸாநாயக்க, பொருளாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் ஆகியோர் உள்ளிட்ட சபை அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் படலம் ஜுலை மாதம் 08, 09 ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக பயிற்றுவிப்பாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் தெரிவித்தார்.
கலாநிதி ஆசாத் புத்தளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் ரஹ்மத்துல்லா மரைக்கார் உம்மு சுலைஹா ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷாத் அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இலங்கை அணி வெற்றி பெறவும் பிரார்த்திக்கின்றோம்.
ReplyDeleteஷீஆயிசம் விசயத்தில் கவனமாக இருந்தால் சரி...
ReplyDelete