Header Ads



பயங்கரவாதத்திற்கு கட்டார், உதவுகிறதா..? (Special Reports)

-அபூஷேக் முஹம்மத்-

1.கட்டார் காஸாவுக்கு உதவிய , உதவுகின்ற விதம் மனிதத்தையும் மார்க்கத்தையும் விட்டு தூரமான சக்திகளுக்கு சங்கடமாகவும் சகிக்க முடியாததாகவும் இருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.
2.ஆனால் அவர்கள் கட்டார் பயங்கரவாதத்துக்கு உதவுவதாக இடும் கூப்பாடு தான் கேட்போருக்கு தலை சுற்றுகின்றது ...
3.கட்டார் காஸாவுக்கு மட்டுமின்றி எகிப்தியர்களுக்கும் உதவுகிறது. மக்களால் விரட்டப்பட்ட கொடுங்கோலர்களுக்கு ஜித்தா புகழிடம் என்றால்,
4.கொடுங்கோலர்களால் விரட்டி விரட்டி வேட்டையாடப்படும் மக்கள் சக்திகளுக்கு தோஹா தான் புகழிடம் என்பது ஒன்றும் மிகையல்ல.
5.கட்டார் இஹ்வான்களுக்கு உதவுகிறது என்பதும் இஹ்வான்கள் பயங்கரவாதிகள் என்பதும் இந்த சியோனிச செருப்புகளின் இன்னொரு புலம்பல்......
6.இந்த வீடியோ கட்டார் எகிப்தியர்களுக்கு மனிதம் சார்ந்து தான் உதவியது என்பதற்கும் அது இன்று நேற்று அல்ல காலம் காலமாக கடமையுணர்ந்து புரியும் உதவி தான் என்பதற்குமான சிறியதோர் சான்று.

உலக நிகழ்வில் சான்றுகள் :

1* 2006 ல் எகிப்தின் பயணப்படகு ஸலாம் 98 கடலில் மூழ்கியதில் 1033 எகிப்தியர்கள் ஷஹீதாயினர் . அந்நிகழ்வை முபாரக் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் கட்டார் அதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லி உதவியும் அளித்ததுடன் மூழ்கிய படகுக்குப் பதிலாக புதியதோர் கப்பற் படகையும் வழங்கியது.
பலியானவர்கள் எல்லாம் இக்வான்களா? 
இல்லை மனிதம், மார்க்கம் அதை செய்யத் தூண்டியதா ?
2* 2007ல் இரு இரயில்கள் எகிப்தில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 86 பேர் பலியாயினர். கட்டார் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்னதுடன் உதவியும் அளித்தது.அத்துடன் விபத்துக்கு காரணமான இரயில் பாதைகளையும் தன் செலவில் செப்பனிட்டுக் கொடுத்தது.
இத்தனைக்கும் பலியானவர்கள் ஒன்றும் இக்வான்களல்ல.
3* முபாரக்கின் காலத்தில் எகிப்திய விவசாயிகளுக்கு ஆயிரம் உளவு இயந்திரங்களை கட்டார் வழங்கியது. விவசாயிகள் எல்லாம் என்ன இக்வான்களா?
4* கல்வி, சுகாதாரம் மற்றும் அபிவிருத்திக்கு உதவியாக பல உதவிகளை கட்டார் செய்தது. Industrial Area வை அமைத்துக் கொடுத்தது. சுற்றுலா விருத்திக்கு உதவியது. கல்வி, சுகாதாரம், அபிவிருத்திக்கான நிதி பரிபாலனம் இக்வான்களிடம்
இருந்ததா என்ன ?
5* முபாரக் வீழ்ந்தவுடன் எகிப்திய திறைசேரியின் பற்றாக்குறை 172 பில்லியனாக இருந்தது. உடனே கட்டார் இரண்டு பில்லியன் டாலர்களை தூக்கி கொடுத்தது. அவ்வேளை ஆட்சியில் இக்வான்களா இருந்தனர் ?
6* இராணுவ சபையின் ஆட்சிநேரத்தில் எகிப்தின் பொருளாதாரம் முற்றாக விழ மயிரிழையில் தொக்கி நின்றது. எகிப்திய பவுண்ட் பெருமதியிழந்து போயிருந்தது. உடனே கட்டார் எகிப்திய திறைசேரியில் மூன்று பில்லியன் டாலர்களை சேமிப்பில் இட்டு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து எகிப்தைக் காத்தது.
நிதித்துறை என்ன இக்வான்களிடமா இருந்தது ?
7* முர்சியின் காலத்தில் ஊழியர்களின் சம்பளத்தை கொடுக்க உலக வங்கியிடம் நாலு பில்லியன் கடன் கோரிய எகிப்து கடும் நிபந்தனைகளை அதற்காக முகம் கொடுக்க நேர்ந்தது.
அவ்வேளை கட்டார் எவ்வித நிபந்தனையுமின்றி எட்டு பில்லியன் டாலர்களை சம்பள குறையை நீக்க கொடுத்து உதவியது. எகிப்தின் ஊழியர்கள் எல்லாம் இக்வான்களா?

உரத்த சிந்தனை :
***************
1.இவைகளெல்லாம் குறிப்பிடத்தக்க இருபது விசயங்களில் ஒரு சில மட்டுமே
2.கட்டாருக்கு எதிராக குறைக்கும் பிரதான குரல்கள் எகிப்தின் சீசி ஆதரவு பித்தலாட்ட ஊடகங்கள் தான்.
3.அவர்களின் தூற்றல், வசைகளுக்கு பெரும்பாலான எகிப்து மக்கள் பொறுப்பல்ல. இந்த வீடியோவின் இறுதியில் அழுகையுடன் கட்டார் ஆட்சியாளருக்கு ஓர் எகிப்தியர் கேட்கும் பிரார்த்தனை தான் அந்நாட்டின் கட்டார் பற்றிய பெரும்பான்மைக் கருத்து என்பதில் மிகையில்லை.
4.கட்டார் மனித நேயம்மிக்க ஒரு நாடு

6 comments:

  1. Don't lie bro
    Time ago all ihuwann stay in Saudi sayed qutoob brother and many ihuwan leaders stayed in Saudi then they try to destroy Saudi
    Dr zakir nayak protect by Saudi and stayed there don't play your shia magic words here

    ReplyDelete
  2. தர்மம் வெல்லும் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  3. Infas do stop bluffing . U live in the past .whole world is crying for Qatar . Saudi acting on Zionist agenda.

    ReplyDelete
  4. The motive, some, behind supporting Qatar is they indirectly support Shia Iran oppose the Saudi. This is the fact

    ReplyDelete
  5. Idi Ameen died in Saudi, Tunisian despot Ben Ali found refuge in Saudi. One of the reasons Saudi, got angry with Obama regime was his silence during Egyptian revolution. Anfaz, you are in Sri Lanka which is not under the oppression of Saudi despots, please be objective in your analysis.

    ReplyDelete
  6. Where we're you leaned brother ihuwan?who set up king rule? Whose this middle east monarchy? What's related this issue & zakir naik?

    ReplyDelete

Powered by Blogger.