Header Ads



இலங்கையிள் வெறுப்புணர்வு குற்றங்களை சகல Mp களும் கண்டிக்க வேண்டும் - கனடா

வெறுப்புணர்வு குற்றங்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும் என்றும்,அவை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஒன்றிணைந்தஎதிர்க்கட்சியிடம், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங்வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகருடன்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமால்ராஜபக்ச உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படாதுள்ளமை மற்றும் சமகாலஅரசியல் நிலைவரங்கள் குறித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கனேடிய தூதுவரிடம்எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்களின் அரசியல்பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கனடா ஆதரவளிக்கும் என்று தாம் இதன்போதுஎடுத்துரைத்துள்ளதாக கனேடிய தூதுவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.