இலங்கை முஸ்லிம்கள், ஐரோப்பிய நாடுகளிளிடம் முறையிடுவது வேடிக்கையானது - சானக்க Mp
பொதுபல சேனா அமைப்பினை உருவாக்கியது நோர்வே தான் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிப்படையாகவே கூறியிருக்கும் நிலையில் நோர்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களிடம் இலங்கை முஸ்லிம் பிரச்சினைகளை முறையிடுவது வேடிக்கையான விடயம் எனவும் அஸாத் சாலி போன்ற தரகர்கள் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டீ வீ சானக்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..
நேற்றையை தினம் கொழும்பு தெவடகஹா பள்ளிவாயலில் ஐரோப்பிய யூனியன்இ நோர்வே உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் சிவில் சமூகம் சந்தித்து முறையிட்டதாக முஸ்லிம் நண்பர்கள் சிலர் என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
சிவில் சமூகங்கள் தூக்கிச் சுமந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரும் அஸாத் சாலியின் நெருங்கிய நண்பருமான ராஜித சேனாரத்ன பொதுபல சேனா அமைப்பு நோர்வே நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டதாக பல தடவைகள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அழுத்த கொடுக்குமாறு நோர்வே உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனிடம் கோரியுள்ளது வேடிக்கையிலும் வேடிக்கையான விடயமாகும்.
நோர்வேயிடம் போய் முஸ்லிம்களின் பிரச்சினையை முறையிடுவது ஓநாய் தொடர்பில் நரியிடம் முறையிட்ட கதையாகவே அமைந்துள்ளது இது விடயமாக நாம் அறிந்துவைத்துள்ள போது உலகத்தில் உள்ள எல்லா விடயங்களையும் அறிந்துவைத்துள்ள அஸாத் சாலி போன்றவர்கள் இதனை அறிந்துவைத்திருக்கமாட்டார்கள் என எவராலும் கூறமுடியது.
அரபு நாட்டு தூதுவர்கள் மூலம் உதவிகளை பெற்று தான் செய்ததாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் அஸாத் சாலி போனவர்கள் முன்னின்று நடத்தியிள்ள இந்த சந்திப்பின் மூலம் ஐரோப்பிய தூதுவர்கள் ஊடாக அவருக்கு சுயலாபங்கள் ஏதும் பெற்றுக்கொள்ளும் நோக்கங்களோ அல்லது வேறு நல்லாட்சியார்களின் எதையோ சாதிக்கும் நோக்கம் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர்இ
ஏற்கனவே மஹிந்தவை இனவாதியாக சித்தரித்து உண்மையான இனவாதிகளின் சதிவலையில் முஸ்லிம்களை சிக்கவைத்த அசாத் சாலி போன்ற தரகர்களின் சுழ்ச்சிகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூகம் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் இனவாதிகளை விடவும் அஸாத் சாலி போன்ற தரகர்களே பயங்கரமானவர்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டீ வீ சானக்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
When governments fail to address the grievances of the minorities there is no issues in informing to the international community. Do you know JO also went to the UN against the government??? Hate speech must be stopped by any means.
ReplyDeleteஉண்மையான க௫த்து. கயவர்களையும் உலக ஆசையை கொண்ட போலி முஸ்லிம் தலைவர்களிடம் நம் சமூகம் சிக்கி தவிக்கிறது. யா அல்லாஹ் நம் சமூகத்திற்கு ஒரு சிறந்த தலைவரை அடையாளம் காட்டி விடும்.
ReplyDeleteAsath sally யையும் நம்பவே முடியாது
ReplyDeleteஐயா சானக்க, இதில் என்ன வருத்தம் உங்களுக்கு? திருடனின் கையில் திறப்பை கொடுப்பதாக வைத்துக் கொள்வோமே? நோர்வேயிடம் மட்டுமல்லவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகளும் நமது ஜனாதிபதி போல் இரட்டை வேடம் போடுபவர்களா என்ன?
ReplyDeleteYes 100% correct.It is the big joke that Muslims who gone against UNO,Norway and western world in 2010 in Geneva asking the help of them.It is the Norway who are backed by western world want to attack Muslims to avenge the Geneva defeat.It is the 'illam Parippu"
ReplyDeleteIt is the result of Moulavies involvement in Politics.It is the used and dump of Mahida's policy.Mahinda used Jamiathul ulama and Muslims to protect himself from gallows and dumped them.Now finished and get rady to jump to the sea.
இலங்கையில் எப்போதும் நோர்வே சந்தேகமாக அவர்கள் தான் பொதுபலசேனா உருவாக்கினார்கள் என்றும் அது இது என்றும் சொல்லுறார்கள் ஆனால் அவர்கள் அப்படியில்லை.இலங்கை மீது வெள்ளக்கார நாடுகள் எப்போதும் இரக்கத்தோடு தான் பார்க்கிறார்கள் ஆனால் எங்கட நாட்டின் அறபடிச்சவங்கள் தான் அதுக்கு எதிரா சந்தேகிக்கிறர்கள்.நோர்வே இலங்கையில் குழப்ப அவர்களுக்கு ஒன்றும் அவசியமில்லை நோர்வே உலகத்தில செல்வேந்த நாட்டு பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன.
ReplyDeleteஇந்த பொதுபலசேனா தீவிரவாத இயக்கம் உருவாக்கியவர்கள் உள்நாட்டு அரசியல்வாதிகளே.
இன்று அசாத் சாலி போன்ரவர்கள் சமுகம் சார்ந்து அரசியல் செய்கின்ரவர்கள் இதில் ஒரு சுயநலமும் அசாத்சாலிக்கு இல்லை பொதுநலமும் மக்களுக்கான மக்கள் ஆட்சி நல்லாட்சியில் நடக்க வேண்டும் என்பதுக்காகவே அஸாத் சாலி செயற்படுகின்ரார் நீங்கள் யார் நீங்கள் யாருடைய எழும்பு பொருக்கி என்பது மக்களுக்கு தெரியியும் அது சரி நீங்க பாராளுமன்ர உறுப்பினராக இருந்து இந்த ஞாயானசாராவை பாராளுமன்ரதில் பேசினீர்கலா இல்லை உங்களை போன்ரவர்கள் இன்று ஞாயானசாராவை வலர்த்து விட்டு இன்று அசாத் சாலியை குற்றம் சொல்கின்ரீர்கள் என்ரால் நீங்க மஹிந்தவாதீதான் என்பது எங்களுக்கு புலனாகிரது
ReplyDeleteGee சரியாகச்சொன்னீர்கள் இந்த முட்டாள் எம் பிக்கு இதைவிட உறைப்பாக எழுத வேண்டும்
ReplyDelete