IS அனுசரணையுடன் ஞானசாரரை கொல்ல திட்டம், ஒத்திகையும் நடத்ததாம்..!
- ARA.Fareel-
ஐ.எஸ். அமைப்பின் அனுசரணையுடன் அதேபாணியிலான குழுவொன்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பின்னணியில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் அவரது சகோதரரும் இருக்கிறார்கள். இதனாலேயே ஞானசார தேரர் தலைமறைவாக இருக்கிறார்.
கொலைத் திட்டம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளோம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்தது.
ராஜகிரியவிலுள்ள பொதுபல சேனாவின் செயலகமான பன்சலையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,
ஞானசாரரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிட்டுள்ளோம். இம்முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஞானசார தேரர் வாகனத்திலிருந்து இறங்கும்போது அல்லது மேடையேறும் போது கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஞானசார தேரரின் சாரதிக்கு நாம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். ஞானசார தேரருக்கு ஏதும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்.
நாம் எமது தாய்நாட்டுக்கு ஆதரவானவர்கள். ஞானசார தேரர் ஒருவேளை கொலை செய்யப்பட்டால் நாட்டில் பாரிய விளைவுகள் ஏற்படலாம் என்று நாம் பயப்படுகிறோம். பொலிஸாரின் உதவியுடன் அவர் கொலை செய்யப்படலாம் என சந்தேகிக்கின்றோம். ஏனென்றால், குருநாகலில் பொலிஸார் பிடிவிறாந்து எதுவுமில்லாமலே அவரைக் கைது செய்ய முயற்சித்தனர்.
ஞானசார தேரர் திங்கட்கிழமை பொலிஸில் வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தருவதாக கூறியிருந்தும் அதற்குமுன்பு குருநாகலில் அவரைக் கைது செய்ய முயற்சித்தனர். இதனால் பொலிஸ் மீது எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஞானசார தேரர் மறைவாக இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்று எம்மால் கூறமுடியாது. ஆனால் அவர் இன்னும் கொலை செய்யப்படவில்லை என்று மாத்திரமே கூறமுடியும்.
ஞானசார தேரருக்கு அளுத்கம சம்பவத்துடன் தொடர்பிருக்கிறது என்று தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்கள். ஆனால் நாம் அவருக்கு தொடர்பில்லை என்று கூறுகிறோம். இச்சம்பவம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கும்படி நாம் தொடர்ந்து கூறினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.
நாட்டில் தீவிரவாதத்துக்கு எதிராகவும் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பவும் தமிழர்கள், இந்து மக்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள். தீவிரவாதத்துக்கு எதிராக போராட கிறிஸ்தவ மக்களையும் முஸ்லிம்களையும் நாம் அழைக்கிறோம். சம்பிரதாய முஸ்லிம்கள் எம்மை ஆதரிக்கிறார்கள். அவர்களது பிரச்சினைகளை எம்மிடம் முன்வைக்கிறார்கள். ஆனால் எம்முடன் ஒரு மேடையில் அமர்வதற்குப் பயப்படுகிறார்கள். அடிப்படைவாத முஸ்லிம்களால் அவர்களது குடும்பங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதனாலேயே பயப்படுகிறார்கள்.
ஞானசார தேரரை கைது செய்யும்படி முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அசாத்சாலி போன்றவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசியல் லாபம் கருதி அவர்கள் கூறுவது போன்று செயற்படுகின்றார்கள். ஞானசார தேரரை கைது செய்யாவிட்டால் நாம் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியேற்படும் என்று பயமுறுத்துகிறார்கள். அசாத்சாலி, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ இதன் பின்னணியில் இருப்பதாக பொய்ப் பிரசாரம் செய்கிறார்.
தொடராக ஆட்சி செய்துவந்த அரசாங்கங்களின் அரசியல் சுயநலம் காரணமாகவே நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. 2002 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் பௌத்த பிரதேசங்கள் தொல்பொருட்கள் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஆணைக்குழுவொன்றினை நியமித்திருந்தார்.
அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இன்று பிரச்சினைகள் உருவாகியிருக்காது. அந்த அறிக்கையில் கூரகல, முகுதுவிகாரை, செவனகல, தீகவாபி பிரதேசங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்தர்கள் மதம் மாற்றப்படுகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாட்டில் இன்றைய பிரச்சினைகளுக்கு பொதுபல சேனா காரணம் என்று கூறமுடியாது என்றார்.
பல்லால் கிழிக்கிற பனங்கிழங்கு
ReplyDeleteஉங்க காமடிக்கு ஒரு அளவே இல்லையாடா....?
ReplyDeleteIsற்கு எதற்கு ஒத்திகை அவர்கள்தான் பெரிய பயங்கரவாதிகளாச்சே
ReplyDelete