Header Ads



IS இலங்கையில் சுதந்திரமாக வளர்கிறது - ஞானசாரர் ஒளிந்துகொண்டு இருக்கவில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லை..!

உலக நாடுகள் பல தடை செய்த விடுதலைப்புலிகள் இயக்கமும், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் இலங்கையில் சுதந்திரமாக வளர்ந்து வருகின்றன என பொதுபலசேனாவின் உறுப்பினர் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -06- இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

ஞானசார தேரரை கைது செய்ய நடத்தப்பட்ட முயற்சி முற்று முழுதாக அவரைக் கொன்று விடும் திட்டம் மட்டுமே.

அண்மையில் சுமார் 200 பொலிஸார் அவரை, பிரபாகரனைக் கைது செய்ய வருவது போல் வந்து முறைகேடாக நடந்து கொண்டார்கள். இந்த விடயம் மிகப்பெரிய சந்தேகமாகும்.

இந்த விடயத்தில் அவரைக் கொலை செய்து விடவே முயற்சி நடைபெற்றது. அவர் எங்கும் ஒளிந்து கொண்டு இருக்கவும் இல்லை. இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை.

ஞானசார தேரரைக் கொன்று இந்தப் பிரச்சினையை முற்றாக முடித்து விடவே திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தன. அதேபோல் தேரருக்கு மரண அச்சுறுத்தல் இன்றும் இருக்கின்றது.

மேலும், சர்வதேசத்தில் பல நாடுகள் தடை செய்த விடுதலைப்புலிகள் இயக்கமும், ஐ. எஸ். ஐ. எஸ் தீவிரவாத இயக்கமும் இலங்கையில் சுதந்திரமாக வளர்ந்து வருகின்றன.

அதனை அறிந்தும் ஆட்சியாளர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். எமக்கு மகிந்தவோ, மைத்திரியோ, ரணிலோ எவரும் அவசியம் இல்லை. நாட்டில் நல்லிணக்கம், நிரந்தர சமாதானம் ஏற்படும் வகையில் நீதி செயற்பட வேண்டும் என்பதே முக்கியம்.

இந்த நாடு முற்றிலுமாக ஓர் பௌத்த நாடு என்பதனை ஏற்றுக் கொள்ளாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் சந்தரதன தேரர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.