பேஸ்புக்கில் வாழைப்பழ பொதி - CID யில் முறையிட்ட அமைச்சர்
வாழைப்பழ பொதி தொடர்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாழைப்பழ பொதிகளில் தமது புகைப்படம் பொறிக்கப்பட்டவாறு பகிர்ந்தளிக்கப்பட்டதாக பேஸ்புக்கில் வெளியான புகைப்படம் தொடர்பாகவே அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, அந்த வாழைப்பழ பொதியில், அமைச்சரின் கைத்தொலைபேசி இலக்கம் மற்றும் காலியிலுள்ள அவரின் இல்லத்தின் இலக்கம் என்பன பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment