ஜனாதிபதி - பிரதமரின் இப்தாரை புறக்கணித்து, எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்..!
SRI LANKA MUSLIM PROGRESSIVE FRONT MEDIA (SLMPF)
இலங்கை முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் நிலவும் இனவாத செயல்களை முன்னாள் ஜனாதிபதி கட்டுப்படுத்த தவறியதால், அதன் பின்னால் அவர் தான் உள்ளாரா என சந்தேகம் கொண்டு இவ்வாட்சிக்கு தங்களது பெரும்பான்மை வாக்குகளை அளித்திருந்தார்கள். முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இவ்வரசானது, முஸ்லிம்கள் இதனை ஏன் கொண்டுவர சிந்தித்தார்களோ அதனை சிறிதேனும் நிவர்த்தி செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தை விட பிரச்சினைகள் பூதாகரமாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினுடைய காலத்தில் மிக நீண்ட காலத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இனவாத செயல் அரங்கேறும். தற்போது விடிந்து எழும்பி சமூக வலைத்தளங்களை அவதானித்தால் எங்கயாவது ஒரு இடத்தில் இனவாதிகள் தங்களது கை வரிசையை காட்டி இருப்பார்கள். இன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் இவர்களின் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுகின்றன. சாய்ந்தமருது அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு விடுமா என கேட்குமளவு இனவாத ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன.
அன்றும் இன்றும் இடம்பெற்ற இனவாத செயல்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்னவெனில், அன்று இடம்பெற்ற இனவாத செயல்களுக்கு அரச அங்கீகாரம் இருக்கவில்லை. இன்று இடம்பெறும் இனவாத செயல்களுக்கு அரச அங்கீகாரம் உள்ளது என்பதாகும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்கள் இடமாற்றப்படுவதற்கு நிச்சயம் அரச அங்கீகாரம் வேண்டும். இதுவே இன்றைய இனவாதத்தின் பின்னுள்ள அரச அங்கீகாரத்தை நிறுவ போதுமான சான்றாகும்.
இன்னும் இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதியின் முந்தானை பிடித்து, இதனை அவரால் தீர்க்க முடியுமென நம்பினால் அதனை விட மடமை வேறு எதுவாகவும் இருக்காது. எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது பதவி ஆசைகளுக்காக இந்த உண்மைகளை நன்கு அறிந்தும் பேசாமல் இவ்வரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இன்று நிலவும் இனவாதம் தொடருமானால் இவர்கள் தங்களது பதவிகளை இவ்வாட்சியாளர்களின் முகத்தில் தூக்கி வீசிவிட்டு வெளியேற வேண்டும். அதனை செய்வதற்கு முன்பு தற்போதைய இனவாதம் தொடருமானால் தாங்கள் பதவிகளை வீசிவிட்டு வெளியேறுவோம் என்பதற்கான சிறு சமிஞ்சையை இவ் இப்தாரை புறக்கணிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
அதனை விடுத்து எது செய்தாலும் நாங்கள் உங்களோடு தான் இருப்போம் என்றவாறு இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டால், அவர் இனவாத செயல்களுக்கு இன்னுமின்னும் அங்கீகாரம் வழங்குவார். ஒரு புறத்தில் இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு மறு புறத்தில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதானது முஸ்லிம்களை மடையர்களாக்கி அடிபணியச் செய்யும் செயல்களாகும். இதற்கு நாமும் துணை போய் விடக்கூடாது. இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு முஸ்லிம் பொது மக்களும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் துணை போய் விடக்கூடாது.
முஸ்லிம் அரசியல் வாதிகளே! உங்கள் உள்ளங்களில் இன்றைய இனவாதத்துக்கு இவ்வாட்சியாளர்கள் துணை போகவில்லையென கருதினால் புனிதமான உங்கள் நோன்புகளை திறக்க குறித்த நிகழ்வுகளுக்கு செல்லுங்கள்.
Since the Muslim Vote Bank has been traded by our politicians, the SLMC is dead. The ACMC is busy making money and covering the corruption charges made against them and the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits.
ReplyDeleteThese are Muslim politician leaders who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEOLOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. On the other hand, they “hoodwink and dupe” the governments in power (National Sinhala Parties) and get all their perks and portfolios and government positions for their “henchaiyaas and kith and kin”.
The “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political REPRESENTATIVE strength unitedly that we can gain our position as equals in the country. We can be sympathetic to any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are losing. WE DO NOT NEED THE SO-CALLED 2 (TWO) LEADERS OR PARTIES), THE SLMC and THE ACMC, Insha Allah. We can even do this as an “Independent Group” INSHA ALLAH.
Noor Nizam. Convener – “The Muslim Voice”.
Please do not make more problem, we need to think before say something. Why don't we ask President to invite Ganasera and some BBS for this ifthar. Let see how they behave front of everyone.
ReplyDeleteMake this move to see I we can start a path to settle this problem. Lets hope Ramdan will change some of this problem
இந்த நாட்டிலே நடக்கும் முஸ்லிம் எதிர்ப்பு நாடகத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ள முடியாத ஜனாதிபதியும், பிரதமரும் இப்தாரல்ல, இனி பள்ளிகளைக் கட்டித் திறந்து வைத்தாலும் அவை வேண்டாம் எமக்கு. இவர்களின் வாக்கு வங்கி நாடகத்தின் பக்கடைக் காய் முஸ்லிம் சமூகமா?
ReplyDeleteyes correct demand, i hope they will boycott.
ReplyDeleteWhoever said this is a good suggestion
ReplyDeleteஇதையும் தாண்டி இப்த்தார் நிகழ்வில் கலந்துகொள்ளும் நமது அரசியல் வாதிகளை நாம் புறக்கனிபோம்!
ReplyDeleteWe have to show our good character to non Muslims.
ReplyDeleteIf any Muslim MPS goes to ifthar given PM or president it would be against wishes of Muslim public...such MPs should be condemned and should not be given any votes at all ..
ReplyDeleteFunny request...our politicians vll lick MS foot and Ranils..if they getting minister post...
ReplyDeleteBROTHER ATTEEQ ABU,
ReplyDelete"THE MUSLIM VOICE" FULLY SUPPORTS THIS DECISION, Insha Allah. YES, IF THESE MPs GO TO THESE IFTHAR, SUCH MPs SHOULD BE CONDEMED AND SHOULD NOT BE GIVEN ANY VOTES AT ALL, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".
முஸ்லிம் அரசியல்வாதிகளே உங்களுக்கு வாக்களித்த நாங்கள் சொல்கிறோம் போக வேண்டாம் .நீங்களும் அவர்களுக்கு சொல்லுங்கள் எமக்கும் உங்களுக்கும் வாக்களித்த மக்கள் போக வேண்டாம் என்று சொல்வதால் நாங்கள் வரமுடியாது என்பதை தெளிவாக சொல்லுங்கள்
ReplyDeleteநக்கிய நாவாய்களை நம்மமுடியுமா!??! முதலில் இவனுகள் நோன்பா?? வீதியில் வைத்து செருபபால் அடிக்க வேண்டும் எச்சப்பொறுக்கிகளை. நாம் அண்வரும்,சிந்திக்க வோண்டிய முக்கியமான காலத்தில் உள்ளோம.அல்லாஹ்விடம் பிராத்திப்போம்
ReplyDelete