கனடா வென்கூவரில், இலங்கை முஸ்லிம்களின் இப்தார்
கனடா வென்கூவரில் இயங்கிவரும் முஸ்லீம் அமைப்பான SRILANKA MUSLIM SOCIATY OF CANADA (SLMS CANADA )வினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்த்தார் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜுன் 4ம் திகதி நடைபெற்றது,
கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களது இவ் ஒன்றுகூடலானது வென்கூவர் புறநகரான பெர்னாபி பி.என்.எச் மண்டபத்தில் இடம்பெற்றது, இந்த இஃப்த்தார் நிகழ்வுக்கு ரிச்மண்ட், சர்ரே, பெர்னபி மற்றும் வடக்கு வென்கூவரிலிருந்தும் சுமார் 400 பேர்கள் கலந்து கொண்டு சமூகமளித்தனர்,
வெண்கூவர் வாழ் முஸ்லிம்களின் நலன்கருதி எதிர்காலத்தில் SLMS CANADA இப்பகுதியில் மஸ்ஜித் ஒன்றை அமைப்பதட்கான செயற்றத்திட்டத்தை மேட்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment