அமைச்சரை குரங்கு என கூறியதாலே, மலிங்கவுக்கு தடை
விளையாட்டுத் துறை அமைச்சரை குரங்கு என விமர்சித்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு 6 மாத காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே தொட ரில் லசித் மலிங்க விளையாடமுடியும். சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்ததும் மலிங்கவிற்கான தடைக் காலம் ஆரம்பமாகும்.
அதனால் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான தொடரில் லசித் மலிங்க விளையாட மாட்டார்.
அத்தோடு நடைபெறவுள்ள சிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் சம்பளத்திலிருந்து 50 வீத அபராதமும் மலிங்கவிற்கு விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடை பெற்ற சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற் றோடு வெளியேறியது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் களத்தடுப்பு மோசமாக இருந்தது. முக்கிய பிடியெடுப்புகளைத் தவறவிட்ட தன் காரணமாக தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இதனால் இலங்கை அணி வீரர்கள் உடல் தகுதி குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய லசித் மலிங்க,
நாற்காலியை அலங்கரிகப்பவர்களின் விமர்சனத்தை நான் பொருட்படுத்தவில்லை. இது கிளியின் கூடுபற்றி குரங்கு பேசுவது போல் இருக்கிறது. கிளிக் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என்று கூறி இருந்தார். லசித் மலிங்கவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து மலிங்கவிடம் விசாரணை நடத்த இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் உத்தரவிட்டது. விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லிடி சில்வா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மலிங்கவிடம் நேற்று விசாரணை நடத்தியது. அதன்போது தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை லசித் மலிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு விசாரணை அறிக்கை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி லசித் மலிங்க மீது கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்த விதியை மீறிய குற்றத்திற்காக ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முதலாவது ஒருநாள் போட்டி சம்பளத்தின் 50 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடை பெறவுள்ள சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட முடியும். ஆனால் அதன்பிறகு நடை பெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவருக்கு விளையாட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையை சொன்னாலும் தடையா?
ReplyDeleteஇதில் பாதிக்கப்படபோவது இலங்கை அணி மட்டுமே, மலிங்க இல்லை. மலிங்க சந்தோஷமான போய் Mumbai Indians காக விளையாடுவார்.