ரணிலுக்கு சிகிச்சை, மங்களவிடம் வாங்கிக்கட்டிய மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வைத்திய சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்றிருப்பது குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்திருந்தார்.
பிரதமரை விமர்சிக்கும் தகுதி முன்னாள் ஜனாதிபதிக்கு கிடையாது என மங்கள குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்டிருந்த சுனாமி அனர்த்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி கிடைத்திருந்தது.
இந்த நிதியை தனது சொந்த கணக்கிற்கு மாற்றப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வைத்திய சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதனை எவ்வாறு விமர்சிக்க முடியும் என மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹெல்பிங் ஹம்பாந்தோட்டைக்கான குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறான நிலைமையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் போது பிரதமர் வெளிநாடு சென்றிருப்பது குறித்து மஹிந்த விமர்சித்துள்ளார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான் விஜயம் மேற்கொள்ள தயாராகிய நிலையில், அவ்வாறு கருத்து வெளியிடுவதென்பது நகைச்சுவைக்குரிய விடயமாகும் என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment