Header Ads



மொட்டை பேஷ்புக்குகளை, முஸ்லிம்கள் கண்டு கொள்ளாதிருப்பது நல்லது

(JM.Hafeez)

அந்தக்காலத்து 'கெலேபத்தர'தான் நவீன காலத்து 'பேஷ்புக்' ஆக மாறியுள்ளது என்றும், நவீன காலத்து அனாமதேய சுவரொட்டிகளாகவே பேஷ் புக் பதிவுகளை தான் கருதுவதாக மத்திய மாகாண சபை அங்கத்தவர் செய்னுல் ஆப்தீன் லாபிர் தெரிவித்தார். கண்டியில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.

முன்பு ஒருகாலம் இருந்தது. சில கோழைத்தனமானவர்கள் இரவோடு இரவாக வந்து பேர் ஊர் இல்லாத அனாமதய சுவரொட்டிகளை ஒட்டிச் செல்வார்கள். தனக்கு பிடிக்காத ஒன்றை தலை நிமிர்ந்து கூற முடியாத கோழைகள் மற்றவர்களுக்கு சேறு பூச அன்று சாதாரண வெள்ளைக்கடதாசியையும் கொஞ்சம் மையையும் கோதுமையால் தயார் படுத்தப்பட்ட பசையையும் கொண்டு தமது மன உழசை;சலை வெளிப்படுத்துவர். இதனை சிங்களத்தில் கெலே பத்ர என்பார்கள். இதேபோல் சிலருக்கு ஏசி மொட்டைக் கடிதம் எழுதுவார்கள். ஆனால் மொட்டை கடிதத்தை புத்தி சாலிகள் வெளியே காட்டவும் மதட்டார்கள் அது வெளிவராது. 

ஆனால் நவீனகாலத்தில் வாழும் எமக்கு பேஷ் புக் என்றும், வட்ஸ்ஸப் என்றும் யூடியுப்  என்றும் டுவிண்டர் என்றும் இன்னும் எத்தனையொ பெயர் கொண்டு அழைக்கும் சமுக தகவல் முறைகள் வந்துள்ளன. இதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் எனது பார்வையில் அந்தக்காலத்து 'கெலே பத்தர'தான் நவீன காலத்து 'பேஷ்புக்' ஆக உள்ளது.

கடந்தவாரம் இப்படியாக பேஷ் புக்கில் ஒருவர்ஏதெதோ எழுத அதனால் ஒரு பிரச்சினை பிலிமத்தலாவைப் பகுதியில் ஏற்பட அதனை நூறு மடங்காகப் பெரிதாக்கி இன்னும் எத்தனையோ தகவல் பரிமாற்றம். எனக்கு நாடு முழுவதிலிமிருந்து கண்டியில் பிரச்சினையா என்று தொலைபேசி வந்த வண்ணமே இருந்தது. 

ஆனால் பேஷ் புக் என்ற அந்த தொடர்பு வசதியை கையாண்டதும் பிழை. ஆதனால் எற்பட்ட அமைதி இன்மை பற்றி மேலும் மேலும் கருத்துப் பறிமாறல்களும் பிழையாகவே இடம் பெற்றன. 

எனவே இதனை ஒரு மொட்டைக் கடிதம் என்பதா அல்லது கெலே பத்தர என்பதா எனக்கு தெரியாது. அனால் பொது அப்படியான  மொட்டை தகவல்களை யாரும் நம்மமாட்டார்கள். தற்போது சமுகங்களை மோதவிட சிலர் கனவு காணும் காலமாகும். எனவே இதன் பிறகு பேஷ்புக் மொட்டை தகவல்களை முஸ்லிம்கள் யாரும் கண்டு கொள்ளாதிருப்பது நல்லது. அதிலும் பயங்கரமானது அதற்கு பதில் எழுதுவது. இவை எம்மை எங்குகொண்டுபோய் நிறுத்தும் என்று கூற முடியாது என்றும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.