மாணவி வித்தியா படுகொலை சூத்திரதாரி குமார், எங்கள் நாட்டு பிரஜையல்ல - சுவிட்சர்லாந்து
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகபர் ஒருவர் சுவிட்சர்லாந்து பிரஜை என வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் அனுப்பியிருந்த மின் அஞ்சலுக்கு, இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் பதிலளித்திருந்தார்.
விசாரணைகளின்போது இவர் சுவிட்சர்லாந்து பிரஜை அல்லவெனவும் சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த இலங்கையர் என்பது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் கண்டித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தம்மிடம் சட்ட உதவி கோரினால் அதனை வழங்கத் தயார் எனவும் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment