வெள்ளை மாளிகையில் மோடியை காப்பாற்றிய, பாதுகாப்பு ஆலோசகர்
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ்கார்டனில் கூட்டாக நிரூபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பத்திரிகை குறிப்புகள் எடுத்து கொண்டு வந்திருந்தார். மோடி பேட்டி அளிக்கும் போது திடீரென பலத்த காற்று வீசியது. அதில் அவர் குறிப்பு எடுத்து வந்த பேப்பர்களின் சில பக்கங்கள் காற்றில் பறந்தன.
அதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கவனித்துக் கொண்டிருந்தார் அப்போது மேடையின் கீழ் முன்புறத்தில் அமர்ந்து இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவற்றை சேகரித்து பிரதமர் மோடியிடம் கொடுத்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவரை காப்பாற்றினார். இதில் மற்ற மூத்த இந்திய அதிகாரிகளும் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மீண்டும் காற்று பலமாக வீசி குறிப்பு பேப்பர்களை பறித்து சென்றது. அப்போது தோவல் அவற்றை தேடிப் பிடித்து எடுத்து மோடியிடம் ஒப்படைத்தார்.
Post a Comment