Header Ads



தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது, மற்றுமொரு குழு தாக்குதல் - வவுனியாவில் சம்பவம் அசிங்கம்

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மற்றுமொரு முஸ்லிம் குழு தாக்குதல் மேற்கொண்டமையால் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று -26-காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். 

அவ் இடத்திற்கு சென்ற பிறிதொரு முஸ்லிம் குழுவினர் அவ்வாறு வழிபடுவது தவறு எனவும் அவ் வழிபாட்டை நிறுத்துமாறு கோரியும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இரும்பு கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, உலுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

22 comments:

  1. இவ்வாறான குழு சண்டைகள் இலங்கை முஸ்லீம் சமூக முன்னேற்றத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏட்படுத்தக்கூடியது .

    ReplyDelete
  2. வஹாபிச முட்டால்களின் மூர்க்கத்தனமான செயல்பாடுகலாள் ஏனைய சமூகங்களுடனும் முறன்பட்டுக்கொண்டு எமது சமூகத்துக்குள்ளும் பிரச்சினை. ஞானசாரவின் பிரச்சாரங்களை மெய்ப்பிக்கக்கூடிய சம்பவமாகப் பார்க்கப்படும்.

    ReplyDelete
    Replies
    1. அவனவன் உரிமைகளை விடுஙகளேண்டா.

      Delete
    2. வஹாபிசத்தில் உள்ள முட்டாள்கள ்போல் உமது கருத்தும் முட்டாள்தனமானது. உம்மைப்போன்றோறே இவ்வாறு தாக்குதல் நடத்துவது போல ்உமது குறிப்ப இவ்வாறு உள்ளது.

      Delete
    3. பொது பல சேணா வருவதற்கு முதல் காரணமே இந்த தவ்ஹுத் தப்லீக் சண்டை. இவர்கள் என்னதான் நினைக்கிறான்களோ தெரியவில்லை.

      Delete
  3. Weldone Guys.. keep it up...
    நம்மல அழிக்க வெளில இருந்து ஆள் தேவல்ல.

    ReplyDelete
  4. வயலில்,திடலில் தொழுதால் இவர்களுக்கு என்ன பிரச்சினை தேவை இல்லாமல் சண்டையை இழுக்கும் இந்த காவாலி,கூட்டம் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  5. Crazy people. I don't know who gave these idiots to give this authority to go and fight with other in the name of Islam. Please note I don't any of this group. I always ask allah to saw me the starlight parth in every rakah. Of my prayers. only allah can accept our ibadah even it 100% correct.

    ReplyDelete
  6. It is sad to tell we do not manners and patience to tolerate others..why fight?

    ReplyDelete
  7. Yes it justifies Gnanasara's accusation agaisnt a group of people among us.

    ReplyDelete
  8. பைத்தியக் காரனுகள். சமூகத் துரோகிகள்.

    ReplyDelete
  9. சுன்னவுக்காக காயப்பட்ட உனக்கு அல்லாஹ் அளவிலா அருளையும், நட்கூலியையும், அவசரமான சுகதையும் தரட்டும்.
    ...
    தாக்கியவர்கள் பற்றிய துஆ நமது மனதுக்குள் உண்டு.

    ReplyDelete
  10. சுன்னவுக்காக காயப்பட்ட உனக்கு அல்லாஹ் அளவிலா அருளையும், நட்கூலியையும், அவசரமான சுகதையும் தரட்டும்.
    ...
    தாக்கியவர்கள் பற்றிய துஆ நமது மனதுக்குள் உண்டு.

    ReplyDelete
  11. இஸ்லாத்தில் முன்னுரிமைகள் பற்றி இவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
    பெருநாள் ஒரு சுண்ணத்தான விடயம்.
    பெருநாள் தொழுகை ஒரு சுண்ணத்தான விடயம்.
    அதை திடலில் தொழுவது ஒரு சுண்ணத்தான விடயம்.
    ஆனால் சமூக ஒற்றுமை வாஜிபான ஒன்று.
    நிர்வாணமாக நிற்கும் ஒருவன் அவசரமாக மறைக்க வேண்டியது அவனது மானத்தையே தவிர தலையை அல்ல.
    அறிவு வெடித்துச் சிதறும் காலத்தில் வாழ்கிறோம்...
    அட எருமை மாடுகளா.... தேவையான இஸ்லாமிய அறிவை சரி பெறாத முட்டாள்களா......
    இஸ்லாத்தை இல்லாமலாக்க இன்னும் வெளியில் இருந்து ஆள் வர வேண்டுமா???.

    ReplyDelete
  12. ஆச்சரியமாக இருக்கிறது . இம்முறை தமிழர்கள் மீது பழி போடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. குமார் செய்தவர் மீதே பழி. ஏன் யானை அடிக்கு முன் தானே அடிக்கிறீர்?

      Delete
  13. யார் கொடுத்தார் அவர்களுக்கு அதிகாரம்.

    ReplyDelete
  14. சகோதரர் Kumar அவர்களே ஒரு உண்மையான முஸ்லிம் ஏனைவர்கள்மீது அபாண்டமாக இட்டுக்கட்டமாட்டான் அதை அவனுடய மார்கம் பெரும்பாவம் என்று தெளிவுபடுத்தியுள்ளது எனவே அவன் மனிதநேயத்தை அவனின் மார்க்க போதனையால் கடைபிடிப்பவன் இந்த விடயத்தை ஒரு இந்துதமிழன் செய்திருந்தால் அதை தமிழன் செய்தான் என்று இங்கு உருதியாக யாரையும் பயப்பிடாமல் கூறியிருப்பான் ஆகையால் நன்றாக சிந்தியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியாயின் இங்கு comments எழுதும் IK MS, ISIS Racisit போன்றவர்கள் உண்மையான முஸ்லிம்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள்?

      Delete
  15. என் பாசமிகு அன்பு முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்!
    இப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப்படும் போது மனது மிகவும் கஷ்டப்படுகின்றது, கண்கள் கண்ணீரை வடிக்கின்றது. மாற்று மத சகோதரர்கள் எங்களை கேலி பண்ணக்கூடிய இழி நிலைக்கு ஆளாகி விட்டோமே என்று.
    நீங்கள் யார் வேண்டுமானாலும் உங்களுக்கு பிடித்த, நீங்கள் சரி காணக்கூடிய கொள்கையை தாராளமாகப் பின் பற்றலாம், ஆனால் அதை எம் சமூகத்தில் திணிக்காதீர்கள். மேலும் ஒரு பிரிவார் இன்னுமொரு பிரிவாரை நிந்திக்காதீர்கள்.
    நீங்கள் உண்மையில் மார்க்கத்திற்காகத்தான் இவ்வாறு செய்கிறீர்கள் என்று சொன்னால் அது பொய், எனது ஆக்கம் பெரியதாக ஆகக் கூடாது என்பதற்காக ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
    எம் உயிரிலும் மேலான நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மனைவி முஃமினீன்களின் தாய் அண்ணை ஆயிஷா (றழி) அன்ஹா அவர்கள் மீது படுதூறு சுமத்தியவந்தான் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல், நரகத்தின் ஆகக் கீழ் நரகத்தில் இருக்கக்கூடிய (ஹாவியா) வில் இருக்கக்கூடியவன், அபு ஜஹ்ல் கூட இதில் இருக்க மாட்டான். மேலும் இவன் எந்த அளவுக்கு மோசமானவன் என்றால்,
    ஒரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் நீர் அருந்திக்கொண்டிருக்கும் போது இந்த நயவஞ்சகனின் மகன் அப்துல்லாஹ் (றழி) நபியிடம் கேட்டார்கள். யாரசூலுல்லாஹ் நீங்கள் பருகிய நீரில் கொஞ்சத்தை மீதி வைத்து தாருங்கள் அதை என் தந்தையை குடிக்க வைத்து அதன் பரக்கத்திளாவது அவருக்கு ஹிதாயத் கிடைக்க ஆசைப்படுகிறேன் என்று, அதே மாதிரி நபியவர்களும் கொடுத்தார்கள். மகனும் அந்நீரைக் கொண்டு வந்து தன் தந்தையிடம் கொடுத்து நடந்தவற்றைச் சொல்லி அந்நீரை குடிக்கச் சொன்னார்கள்.
    அதற்கு அவன் சொன்னான், வேறு யாருடைய மூத்திரத்தையாவது குடிப்பேனே தவிர இந்த நீரைக் குடிக்க மாட்டேன் என்று. உடனே மகன் ஆத்திரமுற்றவராக நபியிடம் வந்து தன் தந்தையை கொலை செய்ய அனுமதி கேட்கிறார்கள் ஆனால் நபி அவர்களோ மறுக்கிறார்கள்.
    அவனின் இறப்பையும் அடக்கத்தையும் கேள்வியுற்ற நபியவர்கள் அவனது கப்ரடிக்கு வந்து மறுபடியும் அவனது உடலை கப்ரில் இருந்து வெளியே எடுத்து அவனுக்காக தொழுது துஆவும் செய்தார்கள்.
    மேலும் சொன்னார்கள், இவருடைய பாவ மன்னிப்புக்காக அல்லாஹ் என்னை 70 முறை ஜனாஸா தொழுகை தொழச் சொன்னாலும் நான் தொழுவேன் என்று. இதுதான் நபி அவர்கள் எமக்குக் காட்டிய வழி முறை.
    ஆனால் நீங்களோ சில சில்லறைப் பிரச்சினைகளுக்காக ஒருவர் மற்றவரை அடிக்கிறீர்கள், காபிர் என்கிறீர்கள். உங்களுக்கு யார் கொடுத்தது இந்த உரிமையை.
    நீங்கள் உண்மையில் மார்க்கமுள்ள, ஒழுக்கமுள்ள முஸ்லீம்கள் என்றால் இதன் பிற்பாடு இப்படி நடக்கமாட்டீர்கள். (தொடரும்)

    ReplyDelete
  16. Please call 119 and help the police take strict action against those who attacked those who were praying.

    ReplyDelete
  17. Muslims should pray Allah for the victims of the attack and the attackers.

    Both are brothers of believers.

    Pray Allah and forgive the attackers inhuman attack and their ignorance regarding Islam.

    Please pay the attention to solace the brothers of victims.

    ReplyDelete

Powered by Blogger.