Header Ads



முஸ்லிம்கள் மீது, அடுக்கடுக்காக குற்றச்சாட்டு - ஜனாதிபதியை நேரில் சந்தித்து முன்வைப்பு

-ARA.Fareel-

கோட்டை மகா சங்க சபை­யினர் உள்ளிட்ட பிக்­கு­க­ளால் முஸ்லிம்கள் மீதான அடுக்­க­டுக்­கான குற்­றச்­சாட்­டுகள் நேற்றுமுன்தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்­கையில் வாழும் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யிலும் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைகள் மற்றும் முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணங்­களை அறிந்து அவற்றை தீர்த்து வைப்­ப­தற்­காக புத்­தி­ஜீ­விகள் அடங்­கிய சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்கும் படியும் கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

ஜனா­தி­பதி நிய­மிக்கும் சுயா­தீன ஆணைக்­குழு மேற்­கொள்­ள­வேண்­டிய செயற்­பா­டுகள் குறித்தும் மகஜர் ஒன்­றினை நேற்று முன்­தினம் கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­துள்­ளது. மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் இத்­தே­பான தம்­மா­லங்­கார அவர்­களின் கையெ­ழுத்­துடன் ஜனா­தி­ப­திக்கு குறிப்­பிட்ட கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

சியம் மகா நிகாய கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை இலங்­கையில் தற்­போது நில­வி­வரும் இன, மத வேறு­பா­டுகள் குறித்து மிகவும் அவ­தானம் செலுத்தி வரு­வ­தா­கவும் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நிய­மிக்­கப்­படும் சுயா­தீன ஆணைக்­குழு பின்­வரும் விட­யங்­களில் கவனம் செலுத்த வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்­ளது. 

பௌத்த தொல்­பொ­ருட்கள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றமை மற்றும் அவற்றை அழிக்­கின்­றமை தொடர்பில் மேற்­கொள்­ள­வேண்­டிய நட­வ­டிக்­கைகள், பௌத்த பெண்கள் கருத்­த­ரிக்க முடி­யா­த­வாறு சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­கின்­றமை, பௌத்த கிரா­மங்­களில் எவ்­வித கார­ண­மு­மின்றி முஸ்­லிம்கள் குடி­யே­று­கின்­றமை, பௌத்த வணக்­கஸ்­த­லங்­களை சிதை­வுக்­குள்­ளாக்­கின்­றமை, முஸ்­லிம்கள் இந்­நாட்­டுக்கு போதைப்­பொ­ருட்­களை கொண்டு வரு­கின்­றமை, முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் இலங்­கையில் காலூன்று கின்­றமை, முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­ரிக்­கின்­றமை, பௌத்­தர்­களின் வர்த்­த­கத்தை சூழ்ச்­சி­யான முறையில் அப­க­ரித்துக் கொள்­கின்­றமை, வடக்கு, கிழக்கில் வாழும் சில பிரி­வினர் பௌத்த வணக்­கஸ்­த­லங்­க­ளையும் புத்தர் சிலை­க­ளையும் அழிக்­கின்­றமை, முஸ்­லிம்­களால் மேற்­கொள்­ளப்­படும் வன­பி­ர­தேச அழி­வுகள், கிறிஸ்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­படும் மத மாற்­றங்கள்.

மேலும் சிங்­கள பௌத்­தர்­களால் முஸ்லிம் மக்­க­ளுக்கு இழைக்­கப்­ப­டு­வ­தாகக் கூறப்­படும் நட­வ­டிக்­கைகள் குறிப்­பாக முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் பௌத்­தர்­களால் அழிக்­கப்­ப­டு­கின்­றன என்று தெரி­விக்­கப்­படும் முறைப்­பா­டுகள் என்­பன தொடர்பில் குறிப்­பிட்ட ஆணைக்­குழு ஆராய்ந்து இதற்­கான உண்­மை­யான கார­ணங்­களைக் கண்­ட­றிய வேண்டும்.

மேலும் நாட்டின் ஸ்திரத்­தன்­மையை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­படும் பல்­வேறு தேசிய மற்றும் சர்­வ­தேச அமைப்­பு­களை இனங்­கா­ண­வேண்டும். அனைத்து இனங்­க­ளி­னதும் சனத்­தொகை அதி­க­ரிப்பு, சமய பரம்பல், ஒவ்வோர் இனமும் வாழும் பிர­தே­சங்கள் தொடர்­பான விவ­ரங்­களும் திரட்­டப்­ப­ட­வேண்டும். 

எந்­த­வொரு பிரச்­சினை உரு­வா­கு­வ­தற்கும் காரணம் ஏதும் இருக்க வேண்டும். அந்த பிரச்­சி­னை­க­ளுக்­கான கார­ணங்கள் சரி­யாக இனங்­கா­ணப்­பட்டு அவற்றை இல்­லாமற் செய்­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இனங்கள், மதங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு இல்­லா­மையும் பிரச்­சி­னை­க­ளுக்குக் கார­ண­மாகும்.

இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வினை ஏற்­ப­டுத்த ஆரம்ப கல்­வி­யி­லி­ருந்து உயர்­தர கல்வி வரை ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும். ஊட­கங்கள் மூல­மா­கவும் புரிந்­து­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

அனைத்து மக்கள் மத்தியிலும் நிலவிவரும் மத கருத்து முரண்பாடுகள் இல்லாமற் செய்யப்படுவதுடன்  அவர்கள் ஒன்றிணைக்கப்படவேண்டும். 

இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள உயரிய கலாசாரத்துக்குள் அனைத்து மக்களும், அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      

No comments

Powered by Blogger.