''அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்காததினாலேயே, தாக்குதல்கள் தொடர்ந்தன''
-ARA.Fareel-
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும், வர்த்தக நிலையங்களையும் தாக்குவது தீவிரவாதச் செயலாகும். அரசாங்கம் இவ்வாறான தீவிரவாத செயற்பாடுகளுக்கு உடன் நடவடிக்கை எடுக்காததினாலேயே தாக்குதல்கள் தொடர்ந்தன.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும், வர்த்தக நிலையங்களையும் தாக்குவது தீவிரவாதச் செயலாகும். அரசாங்கம் இவ்வாறான தீவிரவாத செயற்பாடுகளுக்கு உடன் நடவடிக்கை எடுக்காததினாலேயே தாக்குதல்கள் தொடர்ந்தன.
நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பு என்.எம்.பெரேரா ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்களின் பள்ளிவாசல் தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் எரியூட்டல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்போது இவ்வாறான சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தால் அது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும் பெரும் பாதிப்பாக அமையும்.
Post a Comment