பொதுபல சேனாவை அரசாங்கம் காப்பாற்றவில்லை, பௌத்தர்கள் அவர்களை வெறுக்கின்றனர்
பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து சிங்கள பெளத்த மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை. பெளத்த மக்கள் வெறுக்கின்றனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பை அரசாங்கம் காப்பாற்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவரை கைதுசெய்ய முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவ் அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து நாம் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றோம். அதேபோல் மக்களும் இவர்களின் விடயத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஞானசார தேரர் விடயத்தில் பெளத்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதே உண்மையாகும். அதேபோல் பிரதான தேரர்கள் மத்தியிலும் நல்லதொரு நிலைப்பாடு இல்லை. ஆகவே பெளத்த கொள்கையை பின்பற்றி வாழும் தேரர் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். பெளத்ததிற்கு முன்னுரிமை கொடுத்தும், சிங்கள நாட்டை விளங்கிக்கொள்ளும் வகையிலும் இவர்கள் செயற்பட வேண்டும்.
அதேபோல் தனிப்பட்ட ரீதியில் எனக்கும் சம்பிக்க ரணவக்க அமைச்சரை பற்றி நன்றாக தெரியும். அவர் பொதுபல சேனாவை ஆதரிக்கவில்லை. ஞானசார தேரரை காப்பாற்றவும் இல்லை. வெறும் அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் மக்களையும் குழப்ப சிலர் முயற்சித்து வருகின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுபல சேனா அமைப்பை அரசாங்கம் பாதுகாக்கவில்லை. நாம் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோகப்போவதும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொது பல சேனாவை ஜனாதிபதியும் பிரதமரும்.சில அமைச்சர்களும் ஞான சாராயத்தை நடுவில் இருப்பாட்டி ஆயுதம் தாங்கி பாதுகாப்பு கொடுப்பதாக யாரும் சொல்லவில்லை .மாறாக நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களை கண்டும் காணாமல் இருப்பதுதான் அவனை பாதுகாக்குறது அரசாங்கம் என்று அர்த்தம்,தேடுகிறோம் என்று சொல்லி இலங்கை பொலிசாரின் அந்தஸ்தையும் மதிப்பு மரியாதையையும் ,உலகம் குறைத்து மதிப்பிட வைக்கும் இந்தச் செயல் இலங்கையில் பிறந்த எந்த மகனும் ஏற்றுக் கொள்ள முடியாது,உலகப்பயங்கஉரவாதிகளையே அடக்கிய இராணுவம்.மதிநுட்பமுள்ள உளவுத்துறை.திறந்த மனதுடன் பேசும் பொலிஸாரையும் நாட்டில் வைத்துக் கொண்டு ஆளை காணவில்லையாம் ,ஞானசார விடயமும் இப்போது ஆட்சி செய்வோரின் காலக்கெடுவும் குறிப்பிட்ட காலத்தோடு முடிவடையும் ஆனால் நாட்டுக்கு பாதுகாப்பு துறை எப்போது உறுதியாக இருக்க வேண்டும் .அப்படிப்பட்ட துறையை அரசியல் இலாபத்துக்காக பகடக்காயாக நினைத்து நடந்து கொள்வது வருங்கால இலங்கைக்கும் இறையாண்மைக்கும் உகந்தது அல்ல என்பதை அரசாங்கம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ,
ReplyDeleteMuuslimgalaik kaappatravumillai ! Balance thaaney ?
ReplyDeleteசம்பிக்க எழுதிய ஜிகாதி புத்தகத்தை வாசித்து பார்த்தால் இதன் அரசியல் மறைகரம் வெளியே வரும்
ReplyDelete