Header Ads



"முஸ்­லிம்கள் மீதான குற்­றச்­சாட்­டுகளுக்கு, அர­சாங்கம் பதி­ல­ளிக்­கா­விடின் நிலைமை மோச­ம­டையும்"

-SNM.Suhail-

ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை­யி­னரால் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் முஸ்­லிம்கள் மீது சுமத்­தப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டுகள் எவ்­வி­த­மான ஆதா­ர­மு­மற்­றவை என கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்­தி­ குழு இணை தலை­வரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

இதே­வேளை, இக்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அர­சாங்கம் உரி­ய­மு­றையில் பதி­ல­ளிக்க வேண்டும். அப்­படி பதி­ல­ளிக்­கா­விடின் நிலைமை மோச­ம­டையும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

குறித்த கடிதம் குறித்தும் அதன் பார­தூரம் குறித்தும் கிராண்ட்­பாஸில் உள்ள ஐக்­கிய தேசியக் கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரி­விக்­கையில்,
நேற்று முன்­தினம் கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை ஜனா­தி­ப­தி­மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தது. இத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி நிய­மிக்கும் சுயா­தீன ஆணைக்­குழு மேற்­கொள்­ள­வேண்­டிய செயற்­பா­டுகள் குறித்தும் மகஜர் ஒன்­றினை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­தது.

மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் இத்­தே­பான தம்­மா­லங்­கா­ரவின் கையெ­ழுத்­துடன் ஜனா­தி­ப­திக்கு குறிப்­பிட்ட கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த கடி­தத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பார­தூ­ர­மான ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­களே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. நாட்டில் முஸ்­லிம்கள் தொல்­பொருள் இடங்­களை அழிப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன், முஸ்­லிம்கள் நாட்­டுக்குள் பாரி­ய­ளவில் போதைப்­பொருள் கடத்­து­வ­தா­கவும் சிங்­கள இளை­ஞர்கள் மத்­தியில் போதைப்­பொருள் பாவ­னையை திணிப்­ப­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது தவிர, சிங்­கள பெண்­க­ளுக்கு திட்­ட­மிட்டு கருத்­தடை சிகிச்சை முஸ்­லிம்கள் அளிப்­ப­தா­கவும் கருத்­தடை மாத்­திரை வழங்ப்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் குறித்த கடி­தத்தில் இருக்­கின்­றன.

இந்த குற்­றச்­சாட்­டுக்கள் அண்­மைக்­கா­ல­மாக நாட்டில் பல முஸ்லிம் பிர­தே­சங்­களில் வாழும் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்பப் பட்டு அச்­சி­நி­லை­யொன்று தோற்­று­விக்­கப்­பட்­டது. இதனால் பல பிர­தே­சங்­களில் முஸ்லிம் உண­வ­கங்­களில் சிங்­கள மக்கள் நுகர்­வது தடுக்­கப்­பட்­ட­தோடு வீணான குழப்­பங்­களும் ஏற்­ப­டுத்தப்பட்­டன.

இதனை வலு­வூட்டும் வகை­யி­லேயே குறித்த கடி­தமும் அமை­யப்­பெற்­றுள்­ளது.

அத்­துடன் சிங்­கள பிர­தே­சங்­களில் முஸ்­லிம்கள் குடி­யே­று­வ­தா­கவும் அங்கு விகா­ரை­க­ளுக்கு சேதம் விளை­விப்­ப­தா­கவும் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை உடைக்­கப்­ப­டு­வ­தா­கவும் பொய்­யான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் சிங்­கள மக்கள் உணர்ச்­சி­யூட்­டப்­படும் வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

அத்­தோடு, முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் நாட்டில் காலூன்­று­வ­தா­கவும் திட்­ட­மிட்டு பௌத்­தர்கள் மத­மாற்றம் செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. இதில் எவ்­வித உண்­மையும் கிடை­யாது.

கடந்த காலங்­களில் சிங்­கள பௌத்த கடும்­போக்கு தேரர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான விசமப் பிர­சா­ரங்­களை முன்­வைத்து வந்­தனர். அதன்­தொ­ட­ராக இன்று படித்த பிக்­கு­களால் இவ்­வா­றான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றமை பார­தூ­ர­மா­ன­தாகும்.
குறிப்பாக படித்த மேல்­தர சிங்­கள மக்கள் கடந்த காலங்­களில் இன, மத வாதத்­திற்கு எதி­ராக செயற்­பட்­டனர்.

இன்று அவர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கடும்­போக்­கா­ளர்­களின் கோஷங்­களை கையில் எடுத்­தி­ருக்­கின்­றனர். இது நாட்டில் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் வாய்ப்பு இருக்­கி­றது.

அர­சியல் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு அமைய மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் இன்று வியா­பித்து வரும் நிலையில் இந்த பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் நாடு பெரும் ஆபத்தை சந்திக்கும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானதா என அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். அதற்காக நீதமான முறையில் விசாரணை நடத்தி  குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். இதுவே இன்றைய குழப்பங்களை சீர் செய்ய வழியாக அமையும் என்றார்.

No comments

Powered by Blogger.