கட்டார் நாட்டு முதலாளிமாரை வெளியேற்றியதால், ஆசியநாட்டு பணியாளர்கள் சவூதியில் நிர்க்கதி
சவூதி அரேபியா கட்டார் நாட்டு முதலாளிமாரை வெளியேற்றியதால் அவர்களது ஆசிய நாட்டு பணியாளர்கள் சவூதியில் நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாள நாட்டு பணியாளர்கள் பணம், இருப்பிடம் இன்றி சவூதியில் இருப்பதாக கட்டாரின் தேசிய மனித உரிமை குழு குறிப்பிட்டுள்ளது.
“இந்த முடிவால் பல புலம்பெயர் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று மேற்படி குழுவின் தலைவர் அலி பின் ஸ்மைக் அல்மர்ரி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் கால்நடைகளை எடுத்துச் செல்லும் பண்ணை தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சவூதியில் நிர்க்கதியாகி இருக்கும் இவர்கள் அடிப்படை தேவை எதுவும் இன்றி கட்டாருக்கு மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்ட நாடுகளில் ஒன்றான சவூதி கட்டாருக்கான ஒரே தரைவழி எல்லையையும் மூடியது. அத்துடன் கட்டார் நாட்டவர்களையும் வெளியேறும்படி உத்தரவிட்டது.
இந்த பிரச்சினை காரணமாக சவூதி தனது மேய்ச்சல் நிலங்களில் இருந்து சுமார் 12,000 கட்டாரிய ஒட்டகம் மற்றும் ஆடுகளை நாட்டை விட்டு வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment