"இஸ்லாத்திற்காக குரல் கொடுப்பதாக காட்டும், அடிப்படைவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிரான நிலை" - கபீர் ஹசீம்
இஸ்லாம் மதத்திற்காக குரல் கொடுப்பதாக காட்டிக்கொண்டு அடிப்படைவாதிகள் செய்யும் செயல்கள் காரணமாக உலக முழுவதும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை மாற்ற வேண்டியது முஸ்லிம் மக்களின் கடமை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனித ரமழானை முன்னிட்டு மகர சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு மதிய உணவு வழங்கல் மற்றும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வை இலங்கை முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்தது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கபீர் ஹசீம்,
சகல கைதிகளுக்கும் தர்ம ரீதியல் செயற்படும் பொறுப்பு உள்ளது. நாட்டின் எதிர்காலத்திற்கு அமைய அனைவரும் இலங்கையர்களாக செயற்படுவது மிகவும் முக்கியமானது.
சிறைச்சாலையில் இருந்து புனர்வாழ்வு பெற்ற பின்னர், சமூகத்துடன் இணைக்கும் போது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து, நீண்டகால தண்டனைகளை பெற்றுள்ள கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்திற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாகவும் அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
Not only Islamic funder mentalism but also Buddhists too
ReplyDeleteWhat BBS talking ???
In Sri Lanka everyone must stop talking about communal
Yes, religious extremism should be by all.
ReplyDeleteWe started
ReplyDeleteMac Haan Kabeer Hashim - you do not know what is Islam.
ReplyDelete