விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டினால், தடுத்து நிறுத்த வேண்டும் - பொன்சேகா
வடக்கு முதல்வர் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு மக்களை தூண்டி விட்டால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் தாண்டி சென்று மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கடவத்த ரன்முதுகலையில் விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பிலேயே வடக்கு மக்களுக்கு தற்போது சுதந்திரம் கிடைத்துள்ளது. அதற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அதற்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் வடக்கு முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை தூண்டிவிட முயற்சித்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அதற்கு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டும் அல்ல அதையும் தாண்டிச் சென்று மேலதிக நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சும்மா வெருட்டி அடக்குவதற்கு விக்கி என்ன கிழக்கு CM மாதிரி டம்மி பீஸ் என நினைத்தார் ஆக்கும்.
ReplyDeleteஇந்த நான்கு வருட ஆட்சியில் கிடைக்க வாய்ப்பில்லாத சமஸ்டியை பற்றி பேசி பேசி விக்கி மாமா சாதித்தது தான் என்ன? மண்ணாசை இனவெறியை தூண்டி மக்களை வளர விடாமல் அதே இடத்தில வைத்திருப்பதெல்லாம் ஒரு சாதனையா
Deleteஇலங்கையில் ராணுவஆட்சி வந்தால் அதன்தலைவாராக நீங்க வந்தால். விக்கியை தூக்கலாம் இப்ப கஷ்டம்.
ReplyDelete