வினோதமான பள்ளிவாசல் - பெயர் என்ன தெரியுமா..?
-Mohamed Abdullah-
பள்ளியின் பெயர்: ''நான் சாப்பிட்டது போல''
இப்படியும் பள்ளிக்கு பெயர் வைப்பார்களா? ஆம். அந்தப்பள்ளி துருக்கி நாட்டில் ''பாதிஹ்'' என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இப்பெயருக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதையுள்ளது. அதில் எங்களுக்கு படிப்பினையுமிருக்கிறது.
''பாதிஹ்" என்ற ஊரில் ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் ஹைருத்தீன் அபந்தி. உறுதிமிக்க மார்க்கப்பற்றுள்ளவராகவும், சிறந்த நற்குணமுடையவராகவும் அவர் இருந்தார்.
அவர், ஊரிலுள்ள சந்தைக்கு செல்லும் போதெல்லாம், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விதவிதமான உணவுகளையும், பழங்களையும் காணும் போது "நான் இதை சாப்பிட்டது போல உணர்கிறேன்" என மனதைக் கட்டுப்படுத்தி, தான் கொண்டு சென்ற பணத்தை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து விடுவார். அப்பணத்தின் மூலம் பள்ளி கட்ட வேண்டும் என்ற ஆசை அவருக்கிருந்தது. காலங்கள் கடந்தன. வைப்பிலிடப்பட்ட பணமும் அதிகரித்தது. அவர் ஆசைப்பட்டு போல பள்ளியும் கட்டப்பட்டது.
வித்தியாசமான இந்த முயற்சி பிறருக்கு படிப்பினையாக இருப்பதற்காகவும் காலாகாலம் இது நினைவு படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் அப் பள்ளிக்கு "நான் சாப்பிட்டது போல" என்று பெயர் சூட்டப்பட்டது.
பள்ளி கட்டுவதற்காக அவர் எடுத்த முயற்சி சற்று வித்தியாசமானது. அதில் அவர் வெற்றியும் அடைந்தார்.
இதில் அறிவுடையோருக்கு படிப்பினை இருக்கிறது.
Nammuda Sanam enna name vaikkum ?
ReplyDelete