Header Ads



பாலிதவுக்கு 'மனித நேயர்' விருதை, முஸ்லிம்கள் வழங்குவார்களா..?


உள்ளக மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்.

வெள்ள அனர்த்தத்தில் அவரது மனிதநேயப் பணிகளின் மாட்சிக்கு அகமும் முகமும் சாட்சி. முகநூலும் சாட்சி!

அளுத்கமை வன்முறையின்போதும் உயிரைப் பணயம் வைத்து மனிதம் காத்தவர் அவர்.

யாருக்கு வரும் இத்தகைய பெருமனம்?

உண்மையான மனிதர்களுக்கு வரும். அவரது உடலில் ஓடுவது சிங்கத்தின் இரத்தம் (சிங்ஹலே) அல்ல. மனித இரத்தம்! அதனால்தான் மனிதம் மாண்புறுகிறது அவரால்!

எனவே, பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும அவர்களுக்கு ஒரு விழா எடுத்து “மனித நேயர்” விருதொன்றை வழங்குவது பற்றி முஸ்லிம் சமூகம் சிந்திக்கலாம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா, தேசிய ஷூரா சபை போன்ற முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் இது பற்றி கரினை கொள்வது நல்லது.

அவர் போன்றவர்கள் ஊக்குவிப்பட வேண்டும். இது அவர்களுக்குச் செய்யும் கௌரவம் மட்டுல்ல, அவர்களது பணிக்கான அங்கீகாரமும் கூட!

அத்தகையவர்களால்தான் பல்லின மக்கள் வாழும் தேசம் வாசம் வீசும்! 

பாலித ஐயா! 

பெருமை கொள்கிறோம் ஐயா! 

இனங்களுக்கிடையில் நீங்கள் கட்டும் தங்கப் பாலம் கம்பீரமாய் நிற்க வேண்டும் ஐயா!

உங்களைப் போல் ஓராயிரம் இளைஞர்கள் எழுந்து விட்டால்…

எந்த சேனாவின் பருப்பும் இந்த மண்ணில் வேகாது!

-ஜெம்ஸித் அஸீஸ்-

3 comments:

  1. Our society should come forward to honour such gentlemen. As the writer said, ACJU and civil societies like Muslim Council should take necessary steps to honour him for his services he has been rendering to all the communities. .

    ReplyDelete
  2. Welldone & thank you Sir..!

    ReplyDelete

Powered by Blogger.