Header Ads



பாடசாலை சீருடையை மாற்ற, ஜனாதிபதி எதிர்ப்பு - திட்டம் கைவிடப்ட்டது

பாடசாலை மாணவர்களின் சீருடையில், மாற்றம் கொண்டுவரப் போவதில்லை. இது தொடர்பிலான ஆலோசனையொன்று முன்வைக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த யோசனை கைவிடப்பட்டதென, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற சித்திரப் போடியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அ​வர் மேற்கண்டவாறு கூறினார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், “தோட்டப்புறப் பாடசாலைகள், தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்நிலையில், பாடசாலைகளுக்குப் போதுமான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே, இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்துவருவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். அவ்வாறு தேவைப்படும் பட்சத்தில், கட்டாயமாக இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் அழைத்துவரப்படுவர்” என்றார்.

“மலேசியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், பாலர் பாடசாலைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. பாலர் பாடசாலை தொடர்பில் நடைபெற்ற உலக மாநாட்டில், இலங்கை சார்பாக நானும் கலந்துகொண்டேன். சிறுவர்கள், 6 வயது வரை பாலர் பாடசாலைக் கல்வியை  கட்டாயமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என, நானும் கையெழுத்திட்டேன்.

‘இதை அரசாங்கம் ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பில் சிந்திப்போம் என்றார்கள். அவ்வாறு ஆகும் பட்சத்தில், தொழில்வாய்ப்புகள் கிடைப்பதுடன், சிறுவர்களின் மன வளர்ச்சியும் மேம்படும்” என்றார்.

2 comments:

  1. யஹபலன! நீங்கள் ரெண்டு தரப்பும் கயிறு திரிங்க, மறுவா கயிறு இழுங்க. 2020 இல் எப்படி திரிப்பயள் என்று பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.