Header Ads



இனவாதக் குற்றவாளிகளை பாதுகாத்துக்கொண்டு, முறைப்பாட்டளரை துரத்தும் காவல்துறை!

-Azeez Nizardeen-

முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளைத் தூண்டியும் இஸ்லாத்தைக் கேவலப்படுத்தியும் வரும் ஞானசார மற்றும் டேன் பிரசாத் போன்ற இரண்டு இனவாதிகள் மீதான நீதிமன்ற பிணைகளை ரத்து செய்யக் கோரியும், தற்போதைய அவர்களின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியும் நான் பொலிஸ் தலைமையத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்துள்ளேன்.

கடந்த வெள்ளிக்கிழமை RRT அமைப்பு எனது முறைப்பாட்டையும் சேர்த்து கோட்டை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளுமாறு நீதிமன்றத்தை வேண்டியுள்ளது.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கையும் நீதிமன்றத்திற்கு அன்று சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த இனவாதிகளின் நடவடிக்கைத் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை முறைப்பாடு செய்த என்னை அச்சுறுத்தும் நடவடிக்கையில் தற்போது  இறங்கியிருப்பதாக எனக்கு சந்தேகம்  எழுந்துள்ளது.

நேற்று எனது வீடு தேடி சிவில் உடையில் வந்த காவல் துறையினர் என்று சந்தேகப்படக் கூடிய நபர்கள் இருவர் நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் என்னை விசாரித்துள்ளனர்.

அந்த நபர்களுக்கு தந்தை வெளியே சென்றிருப்பதாக எனது மகன் கூறியிருக்கிறார்.

''தந்தை எப்போது வீடு திரும்புவார் ? '' என அந்த நபர்கள் விசாரித்தள்ளனர். அந்த நேரத்தை உறுதியாகக் கூற முடியாது என்று எனது மகன் பதிலளித்துள்ளார்.

குறித்த நபர்களிடம் ''என்ன விடயமாக தந்தையை விசாரிக்கின்றீர்கள்?'' என எனது மகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

''அதை உங்களுக்குக் கூற முடியாது உங்கள் தந்தையிடம் தான் கதைக்க வேண்டும்'' என்று கூறிய அந்த நபர்கள் எனது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு நழுவிச் சென்றுள்ளனர்.

காவல் துறையினர் உத்தியோகபூர்வமாக விசாரிக்க வந்திருந்தால் இப்படி நடந்திருக்க மாட்டார்கள். வந்த விடயத்தை அவர்கள் வீட்டாருக்கு அறிவித்து விட்டு சென்றிருக்க வேண்டும். இல்லா விட்டால் எனது தொலைபேசி இலக்கத்தினூடாக அவர்கள் என்னை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இதைப் பதிவிடும் நேரம் வரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

ஆனால் இது இனவாதிகளைத் தண்டிக்கக் கோரும் என்போன்றவர்களை அச்சுறுத்தும் ஒரு செயற்பாடு என்றே எனக்குத் தோன்றுகிறது. சட்டமும் நீதித்துறையும் இனவாதிகளுக்குச் சார்பாகவும் முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகமாக இருப்பதையும்  நன்றாக உணரக் கூடியதாக இருக்கிறது.

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்;

3 comments:

  1. அதுதான் நல்லாட்சி அரசின் பணி தோழரே.

    இவர்கள் நல்லாட்சி போட் ஐ போட்டுக்கொன்டு செய்வகெதல்லாம் இவ்வாறான காரியமே.

    இனவாதக் கருத்துகளை யாரும் பரப்பக்கூடாது என்று சட்டம் போட்டு யாரையும் கூன்டில் அடைப்பார்கள் - ஆனாலும் சி இனவாதிகள் கொலை செய்வார்கள் கொள்ளை அடிப்பார்கள் ஆயினும் கன்டுகொள்ளவே மாட்டார்கள் - ஆனாலும் நல்லாட்சி போட் ஐ மாட்டிக் கொள்வார்கள்.

    கோடி கோடியாக கொள்ளை அடித்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் - சில்லரைக் காசை திருடியவர்களுக்கு மாமியார் வீட்டில் அடைக்கலம் தரும் - ஆனாலும் நல்லாட்சி போட் ஐ மாட்டிக் கொள்வார்கள்.

    ................. இப்படி எத்தனையே - பட்டியல் போட்டால் படிப்பதற்கே போர் அடிக்கும் தோழரே.........

    ReplyDelete
  2. முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் இப்பதிவை மனதில் வைத்துக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  3. எதிரி பலசாலி.வந்தவரகள் காவற்துறையை சேர்ந்தவர்கள்தான் என்று எப்படி சொல்வது.முஸ்லீம் சமூகத்தன் துரோகிகளாக கூட இ ருக்கலாம்.வீட்டை சுற்றி கமர பொருத்துவது சால சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.