அரபு நாடுகளின் நிபந்தனைகளை, கத்தார் நிறைவேற்ற இயலாது - அமெரிக்கா
கத்தார் மீது நான்கு அரபு நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கு அந்நாடுகள் விதித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த கோரிக்கைகள் நிலவிவரும் நெருக்கடிக்கான தீர்வின் அடிப்படையாக அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று, செளதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிராகரித்தார்.
செளதி மற்றும் பிற நாடுகள் கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்துகின்றன; ஆனால் கத்தார் அதனை மறுக்கிறது.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு கத்தாரின் மீது ராஜிய மற்றும் பொருளாதார தடைகள் நிலவும் நிலையில், இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிடமிருந்து அதிகப்படியான உணவுகள் மற்றும் பிற பொருட்கள் கத்தாருக்கு விநியோகிக்கப்படுகின்றன.
வரும் வெள்ளியன்று அதாவது 10 நாட்களுக்குள், இரானுடனான உறவை கத்தார் குறைக்க வேண்டும்; துருக்கிய ராணுவ தளத்தை மூட வேண்டும் என இந்த நான்கு நாடுகள் விரும்புகின்றன.
இரானை அடுத்து கத்தாருக்கு உணவு பொருட்களை அனுப்பியது மொராக்கோ
கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது இரான்
மேலும் அந்த கோரிக்கைகளில், கத்தார் அரசால் நிதி வழங்கப்படும் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும் என்றும் பிற வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத்தை நிறுத்துவது குறித்தும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் நாடுகள் கலந்து ஆலோசிக்க வேண்டும் என டில்லர்சன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இருப்பதும் பதற்றத்தை குறைக்கும் என டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட பின், இது "குடும்ப தகராறு" என்றும் நாடுகள் கூடி இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தொடையையும் கிள்ளிக் கொள்வேன்,
ReplyDeleteதொட்டிலையும் ஆட்டுவேன்..!
இதுதானே என் கொள்கை.
நான் யார்??
ஏமாற நீங்கள் ( அரபிகள் )
இரிக்கிறீர்கள்..!
ஏமாற்ற நான் ( அமெரிக்கா )
இருக்கிறேன்..!!
US advised Saudi and its allies to make economic sanctions against 🇶🇦.
ReplyDeleteUS advised also to Qatar not to heed 🇸🇦 demands.
Hi hi 👋
Arabs falling into another trap by West.
ReplyDeleteRead the advice by Muhammed (sal),
About their plots again to islam and act acoordingly