டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை, தூக்கி வீசுகிறது துருக்கி
''இது விடாப்பிடித்தனமானது. வெறித்தனமாக நடந்து கொள்வதாகும். தற்போது இவர்கள் எப்படி உயிரியல் பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள்? இவர்களால் எப்படி அறிவியல் பாடம் குறித்து உரையாட முடியும்?'' பரிணாம கோட்பாடு குறித்த பாடத்தை துருக்கியின் தேசிய தேசிய பாடத்திட்டத்தில் இருந்து விலக்க அந்நாட்டு அரசு எடுத்த முடிவு குறித்து சமூகவலைத்தளம் ஒன்றில் நடந்த உணர்ச்சிகரமான விவாதம் ஒன்று நடந்தது.
''நவீன அறிவியலின் மிகவும் சக்திவாந்த மற்றும் அடிப்படையான கோட்பாடு பரிணாம வளர்ச்சி தொடர்பான கோட்பாடாகும். இதனை சர்ச்சைக்குரியதாக வர்ணித்திருப்பது நம்பமுடியாதது'' என்று ஒருவர் தெரிவித்திருந்தார்.
எப்படியாயினும் இந்த கோட்பாடு சரியாக கற்றுக் கொடுக்கப்படுவதில்லை என்று மற்றொருவர் வாதிடுகிறார். ''பரிணாம கோட்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளதா என்று ஒருமுறை எங்களைக் ஆசிரியர் கேட்டார். நமபிக்கையுள்ளது என்னும்விதமாக நான் என் கையைத் தூக்கினேன். அப்படியானால் நீ என்ன குரங்கா என்று ஆசிரியர் வினவினார்'' என்று அவர் தன்அனுபவங்களை எடுத்துரைத்தார்.
ஆனால், ஃபேஸ்புக் வலைதளத்தில் கருத்த வெளியிட்ட ஒருவர் குறிப்பிடுகையில், ''அழுகிப்போன மற்றும் பத்தமான இந்த கோட்பாட்டால் நமது நாட்டின் இளையோரின் மனதில் நஞ்சு ஏற்றப்படாமல் தடுத்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தேசிய பாடத்திட்டத்திலிருந்து இதனை நீக்கியது இயல்பான ஒன்றே தவிர வேறொன்றுமில்லை'' என்று தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமையன்று, சார்ல்ஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி தொடரான கோட்பாடு குறித்த ஒரு பகுதி, 9-ஆவது வகுப்பின் (14 மற்றும் 15 வயது மாணவர்கள்) உயிரியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படுவதாக துருக்கி கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்ட வாரியத்தின் தலைவரான அல்பாசலான் துர்மஸ் அறிவித்தார்.
சர்ச்சைக்குரிய பாடங்கள் தொடர்பாக புரிந்து கொள்வதற்கு மாணவர்கள் மிகவும் இளையவர்களாக இருப்பதால், நீக்கப்பட்டுள்ள தலைப்புகளில் உள்ள பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது கல்லூரி பட்டக்கல்வி வரை தாமதப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாடத்திட்டம் தொடர்பாக முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், புனித ரமலான் மாத நோன்பு முடிவில் அடுத்த வாரத்தில் வரவிருக்கும் ஈத் பண்டிகைக்கு பிறகு இம்மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
துருக்கி எங்கும் 1 லட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக கொண்டுள்ள எக்டிம்-சென் என்ற ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரான ஃபெரே அய்டிகின் அய்டொகன் இது குறித்து கூறுகையில், ''தங்கள் நாட்டு பாடத்திட்டத்தில் இருந்து பரிணாம கோட்பாடு குறித்த பாடத்தை செளதி அரேபியாவுக்கு இரண்டாவது இரண்டாவது நாடாக துருக்கி நீக்கியுள்ளது'' என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ''இரானில்கூட பரிணாம கோட்பாடு குறித்து வகுப்பில் 60 மணி நேரங்களுக்கு பாடம் எடுக்கப்படுகிறது. குறிப்பாக டார்வின் குறித்தே 11 மணிநேர அளவுக்கு பாடத்திட்டம் உள்ளது'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பள்ளிகளுக்கான மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டபோது, பரிணாம கோட்பாடுகளை பாடத்திட்டங்களில் இருந்து நீக்குவது தொடர்பான விவாதம் தொடங்கியது.
இந்த மாற்றங்களை துருக்கி அரசுக்கு நெருங்கிய பழமைவாத ஆசிரியர்கள் சங்கம் முன்மொழிந்தது. இந்த மாற்றங்களை அனைத்தும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு , அது தொடர்பான ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு கூறுகிறது.
கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என இஸ்லாம் நம்புகிறது. மண்ணிலிருந்து ஆதாம் என்ற முதல் மனிதன் உருவானான்; அவனின் விலா எலும்பிலிருந்து ஏவாள் தோன்றினாள். பரிமாணக் கோட்பாடு மதரீதியாக ஒப்புக் கொள்ளப்படவில்லை.
அதிபர் ஏர்துவான் மற்றும் ஆளும் கட்சி ஆகியவை, நாட்டை அதன் ஆரம்ப மதிப்பீடுகளில் இருந்து விலகியும், சமுதாயத்தை மேலும் பழமைவாதம் மற்றும் இஸ்லாமியவாதத்துடன் உருவாக்கவும் முயற்சி செய்வதாக துருக்கியின் மதச்சார்பற்ற எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நமது இலங்கையின் நாட்டிலும் பாடசாலை கல்வி திட்டத்தில் பரிணாம கொள்கையை நீக்குவதட்கு கல்வி அமைச்சு ஆலோசனைகளை மேட்கொள்ள வேண்டும்
ReplyDeleteDarwin Theories hehe a Jews theory. How they have planned to divert people from long time ago.
ReplyDelete