ஹுசேனுக்கு எதிராக நடவடிக்கை எடு - சரத் வீரசேகர முறைப்பாடு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் தலைவர் ஜோக்கின் அலெக்சாண்டரிடம் மகஜர் கையளித்துள்ளார்.
தவறான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் என அழுத்தம் பிரயோகிப்பதாகவும் எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மகஜரில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர குறிப்பிடுகையில்
சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட ஆணையாளர் மொனிகா பின்டோவும் இல ங்கை தொடர்பான தவறான தகவல்களைக் கொண்டு அறிக்கையை வெளியிட்டுள் ளார். இதனூடாக ஐக்கிய நாடுகளின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் இராணுவ வீரர்களை நடத்துவதைப்போன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை இராணுவத்தையும் பார்க்கவேண்டும். இலங்கையில் கலப்பு நீதிமன்றம் ஊடாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தினால் அதே வலியுறுத்தல் அமெரிக்க மற்றும் பிரிட்டன் இராணுவம் தொடர்பிலும் இடம்பெறவேண்டும். புலிகளை தோற்கடித்த தன் மூலம் அனைத்து இலங்கையர்களின தும் மனித உரிமையை இராணுவம் காப் பாற்றியுள்ளது என்றார்.
Mr Sarah - Hussain is a puppet of West.
ReplyDeleteYou can't do anything.